Kathir News
Begin typing your search above and press return to search.

விண்மீன் மண்டலத்தில் தகவல்களை சேகரித்த எக்ஸ்போசாட்!

விண்ணில் ஏவப்பட்ட எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் விண்மீன் மண்டலத்தில் உள்ள தகவல்களை சேகரித்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

விண்மீன் மண்டலத்தில் தகவல்களை சேகரித்த எக்ஸ்போசாட்!

KarthigaBy : Karthiga

  |  15 Feb 2024 12:12 PM GMT

விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேக கூட்டமான 'நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் திட்டமிட்டு இருந்தது. இதற்காக 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து இருந்தது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதலத்தில் இருந்து கடந்தமாதம் ஒன்னாம் தேதி பி.எஸ்.எல்.வி சி- 58 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.


பூமியிலிருந்து650 கிலோமீட்டர் உயரத்தில் புவி வட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதிலிருந்து தற்போது விண்வெளி தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட 'எஸ்போசாட்' செயற்கைக்கோள் பூமியிலிருந்து 650 கிலோமீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. இதில் இந்திய எக்ஸ்ரே 'போலரி மீட்டர்' மற்றும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆகிய இரண்டு கருவிகள் உள்ளன. இதில் போலரி மீட்டர் அறிவியல் ஆய்வுகளை தொடங்கியுள்ளது. குறிப்பாக போலிக்ஸ் என்ற கருவி வாயுக்களில் உள்ள மேகக்கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விண்மீன் மண்டலத்தில் உள்ள தரவுகள் புகைப்படங்களை சேகரித்துள்ளது.


எக்ஸ்போசாட் செய்கைகோளை பயன்படுத்தி பெறப்பட்ட தரவு மற்றும் அளவீடுகள் மிகவும் பிரகாசமான விண்வெளி பொருட்களை படிக்க பயன்படுத்தப்படும். அத்துடன் எக்ஸ்ரே துருவமுனைப்பு துறையில் அடித்தளத்தை அமைக்கும் .அதே நேரம் ஸ்பெக்ட்ரோஸ்கோபி கருவி விரைவில் பணியை தொடங்கும் வகையில் விஞ்ஞான செயல்பாடுகளுக்கு இப்போது தயாராக உள்ளது. போலிக்ஸ் கருவி பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள எக்ஸ்ரே வானியல் ஆய்வகத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த கருவியானது இந்திய தொழில் துறையின் ஆதரவுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்றனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News