Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து செயல்படும் 280க்கும் அதிகமான தொழிற்சாலைகள் - என்ன காரணத்திற்காக இயங்குகின்றன அவை.?

தொடர்ந்து செயல்படும் 280க்கும் அதிகமான தொழிற்சாலைகள் - என்ன காரணத்திற்காக இயங்குகின்றன அவை.?

தொடர்ந்து செயல்படும்  280க்கும் அதிகமான தொழிற்சாலைகள்  - என்ன காரணத்திற்காக இயங்குகின்றன அவை.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2020 9:40 AM GMT

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கடந்த ஆண்டுகளில் இந்திய ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தோராயமாக 18% பங்களிப்பை அவை வழங்கி உள்ளன. நடப்பு நிதியாண்டான 2019-20ல் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி ஏற்கனவே 110 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டிவிட்டது.

கொரோனா தொற்றை தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பொது முடக்கம் உள்ள இன்றைய சூழலில் மருந்துகள், மருந்துபொருட்கள் அல்லது மருத்துவ உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தயாரிப்பதில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் தடையேதும் ஏற்படக் கூடாது என்பதற்காக இவை செயல்படுகின்றன.

மருந்துபொருட்கள் மற்றும் மருத்துவமனை உபகரணங்கள் போன்ற இன்றியமையாத பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள 280க்கும் அதிகமான தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 1900க்கும் அதிகமான தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News