Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த நாளில் விரதம் இருப்பவரின் பாவத்தை நான் போக்குவேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.!

இந்த நாளில் விரதம் இருப்பவரின் பாவத்தை நான் போக்குவேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.!

இந்த நாளில் விரதம் இருப்பவரின் பாவத்தை நான் போக்குவேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 2:19 AM GMT

ஏகாதசி என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு பதினோராம் நாள் என்று அர்த்தம். இது மாதத்தில் இரண்டு முறை வருவது, இந்த நாள் விஷ்ணுவிற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது, வைணவ இந்துக்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள். . அறிவியல் ரீதியாக ஏகாதசிக்கும் மனதின் செயல்பாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு, ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனதோடு தொடர்புபடுத்துகிறார்கள்.

இந்த சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலத்தில் வரும் 11 நாள் என்பது மூளையின் திறனை அதிகரிக்க செய்கிறது, கவனக்குவிப்பு இந்த நாளில் அதிகம் சாத்தியப்படுவதாக விஞ்ஞானம் கூறுகிறது . ஆன்மீக சாதனையில் இருப்பவர்கள் இந்த ஏகாதசி நாளில் கடும் விரதத்தை கடைபிடித்து தியானத்திலும் கழிப்பார்கள். ஆன்மீகம் சார்ந்த நன்மைகள் ஒருபக்கம் இருக்க , மாதம் இருமுறை கடைபிடிக்கும் விரதம் உடலை தூய்மைப்படுத்துகிறது, வரைமுறையற்ற உணவு பழக்கத்தை உடையவர்கள் இந்த இ ந்த நாளில் விரதத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.

பகவான் கிருஷ்ணர் ஏகாதசி நாளில் விரதம் இருப்பவர்களின் பாவங்களை முழுமையாக போக்குவேன் என்று கூறுகிறார். இந்த நாள் பாவங்களை களைவதற்கு ஏற்ற நாள். கருட புராணத்தில் பகவான் கிருஷ்ணா சம்ஹார வாழ்வில் மூழ்கிக்கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் ஐந்து படகுகளில் ஒன்று ஏகாதசி விரதம் என்கிறார். மேலும் பகவத் கீதையில் மாதங்களில் நான் கார்த்திகை செடிகளில் நான் துளசி ஏகாதசி என்கிறார். இந்த நாளில் சிரார்த்த பூஜை போன்ற பூஜைகள் செய்ய தடை செய்யப்பட்டிருக்கிறது இந்த நாட்களில் பயிர் வகைகளை உண்ணவோ அவைகளை தெய்வங்களுக்கு படைக்கவோ கூடாது திருமணங்கள் போன்ற நிகழ்வுகளும் ஏகாதசி நாளில் வைக்க கூடாது.

மார்கழி மாதத்தில் வரும் சுக்ல பக்‌ஷ ஏகாதசி யான வைகுண்ட ஏகாதேசிதான் ஏகாதேசிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இந்தநாட்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுவது நிஜமாகவே வைணவர்களின் சொர்கமான வைகுண்டத்தில் இருந்து அபிரிமிதமான சக்தி கீழிறங்குவதாக நம்பப்படுகிறது, இந்த சக்தியானது கோவில்களுக்கு மட்டும் ஏகாதசி அன்று முறையாக மேலும் இறங்கும் என்பது நம்பிக்கை

Next Story
கதிர் தொகுப்பு
Trending News