நாளுக்கு நாள் வளரும் அதிசயம் மிகுந்த வர சித்தி விநாயகர்.! .
நாளுக்கு நாள் வளரும் அதிசயம் மிகுந்த வர சித்தி விநாயகர்.! .

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காணிப்பாக்கம் என்ற ஊரில் உள்ளது வரசித்தி விநாயகர் கோயில். இங்குள்ள விநாயகர் அருகில் உள்ள கிணற்றில் சுயம்புவாக தோன்றியவர் . இந்த கிணற்று நீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கபடுகிறது . இந்த கிணற்று தண்ணீரை ஒரு சிறிது அளவு மட்டுமே தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்ள ஆயிரகணக்கில் கூட்டம் அலைமோதுகிறது . இந்த நீர் அவ்வளவு சக்தி வாய்ந்தது . ஊனத்தை சரி செய்ய கூடிய ஆற்றல் இதற்கு இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள் . தீராத நோய்களுக்கும் இந்த நீர் மருந்தாக அமைகிறது . இந்த விநாயகர் எந்த கிணற்றில் தோன்றி னாரோ அதே கிணற்றின் மீது தான் அமர்ந்திடுக்கிறார் . இவரை சுற்றி எப்போதும் நீர் ஊரிக் கொண்டே இருக்கிறது . இவர் மற்ற விநாயகர்கள் போல் அலங்காரங்கள் ஏதும் இல்லாமல் தோன்றிய போது எப்படி இருந்தாரோ அதே போல் இருக்கிறார் . இவருடைய ஆகர்ஷண சக்தி அந்த இடம் முழுவதும் பரவி இருப்பதை நன்றாக உணர முடிகிறது .
இந்த கோயிலில் தினமும் மாலை சத்யப் பிரமாணம் என்கிற நிகழ்ச்சி நடக்கிறது . அதாவது பொய் சொல்வதாக கருதப்படுபவர்களை இங்கு வந்து சத்யம் செய்ய சொல்கிறார்கள் . யாராவது பொய் சத்தியம் செய்தால் விநாயகர் இவர்களை 90 நாட்களில் தண்டித்து விடுவார் என்று மக்கள் நம்புகிறார்கள் . மேலும் இந்த விநாயகர் ஊனமுற்றவர்கள் மீது தனி பிரியம் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள் . ஊனமுற்ற பலர் தினமும் இங்கு வந்து வழிபடுகிறார்கள் . 500 வருடங்களக்கு முன்பு இந்த இடத்தல் விவசாயம் செய்து வந்த மூன்று கண்பார்வையற்ற காது கேளாத வாய் பேசாத ஊனமுற்ற சகோதரர்கள் இந்த கிணற்றிலிருந்து கண்டெடுத்தார்கள் , அப்போதே அவர்கள் குணமடைந்தார்கள் .
காணியில் உள்ள குளத்தில் தோன்றி தால் காணிப்பாக்கம் விநாயகர் என்று பெயரும் ஏற்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள் . இந்த கோயிலுக்கு அருகில் உள்ள மணகண்டேஷ்வரர் கோயிலில் இருந்து ஒரு பாம்பு தினமும் வந்து இந்த விநாயகரை வணங்கி செல்வதாக மக்கள் கூறுகிறார்கள்
இதையெல்லாம் விட அதிசயமாக இந்த விநாயகர் வளர்த்து வருவதாக மக்கள் கூறுறார்கள் . பக்தர் ஒருவர் அளித்த வெள்ளி கவசம் சில நாட்களில் பொருந்தாமல் போய் விட்டதாக சொல்லி மக்கள் பிரம்மிக்கிறார்கள்