Kathir News
Begin typing your search above and press return to search.

படகு போன்ற கோவிலமைப்பு, வெள்ளம் வந்தாலும் அழியாத தமிழகத்தின் அதிசய கோவில்.!

படகு போன்ற கோவிலமைப்பு, வெள்ளம் வந்தாலும் அழியாத தமிழகத்தின் அதிசய கோவில்.!

படகு போன்ற கோவிலமைப்பு, வெள்ளம் வந்தாலும் அழியாத தமிழகத்தின் அதிசய கோவில்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 1:36 AM GMT

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது இந்த குறுக்குக் துறை முருகன் கோயில் 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் 300 ஆண்டுகளாக கட்டுக்கடங்காத பெரு வெள்ளத்தை எதிர் கொண்ட போதும் எந்த சேதமும் ஏற்படாமல் இருக்கிறது .

இந்த கோயிலின் தெய்வமான முருகன் இன்று கோயில் இருக்கும் இந்த இடத்திலேயே சுயம்புவோக தோன்றியதால் இங்கேயே கோயில் கட்ட பட்டது . இது தாமிரபரணி ஆற்றின் நடுவே அமைந்திருக்கிறது . வருடா வருடம் இங்கு வெள்ளம் வரும் போது 4000 கண அடி நீர் வரும் . இங்குள்ள கோயில் நீரில் முழ்கும் சமயத்தில் கோயில் உள்ள உற்சவர் சப்பரம் உண்டியல் ஆகியவற்றை மேலக் கோவிலுக்கு எடுத்து சென்று வைக்கிறார்கள் . ஆனால் எத்தனை வெள்ளம் வந்தாலும் மூலவர் மட்டும் அங்கேயே இருப்பார் . முன்னூறு ஆண்டுகளாக இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இங்குள்ள மூலவர் எந்த சேதமும் இல்லாமல் இருக்கிறார்

இந்த கோயில் தமிழர்களின் கட்டிட கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இந்த கோயிலும் அதன் அமைப்பும் ஒரு படகு போன்ற வடிவில் இருப்பது ஆச்சர்யமானது . இக்கோயிலின் முன் பகுதி சுவர் கூர்மையான ஒரு படகு போன்ற அமைப்பில் உள்ளது . தண்ணீரை கிழித்து கொண்டு எப்படி படகு செல்கிறதோ அப்படியே இங்கு வரும் வெள்ளத்தை கிழித்து அகற்றுவது போல் இது வடிவமைக்கப்பட் டிருக்கிறது. இதனால் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை . மேலும் இங்குள்ள மண்டபத்தில் கற்களால் ஆன ஐன்னல்கள் நிறைய அமைந்துள்ளதால் எத்தனை வெள்ளம் வந்தாலும் இந்த ஜன்னல் வழியாக சென்று விடுகிறது .

1992ல் ஏற்பட்ட புயலின் போது சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்த போதும் இந்த கோயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கோயில் இங்கு அமைந்திருந்த மலைப் பகுதியை குடைந்து கட்டப்பட்டிருக்கிறது. இயற்கையான பாறை கற்களை செதுக்கி இக் கோயிலை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் இங்கு சுயம்புவாக உருவான முருகன் சிலையை சுற்றியே கற்பகிரஹம் மற்றும் கோயில் எழுப்ப பட்டிருக்கிறது. இங்குள்ள முருகன் பக்தர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தருவதாக நம்புகிறாகள்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News