Kathir News
Begin typing your search above and press return to search.

பஞ்ச பாண்டவருள் ஒருவரான பீமன் வழிபட்ட காளி கோவில் கோவையின் ஆச்சர்யம்.!

பஞ்ச பாண்டவருள் ஒருவரான பீமன் வழிபட்ட காளி கோவில் கோவையின் ஆச்சர்யம்.!

பஞ்ச பாண்டவருள் ஒருவரான பீமன் வழிபட்ட காளி கோவில் கோவையின் ஆச்சர்யம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 1:45 AM GMT

மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வழிபட்ட ஸ்தலம் கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலாகும் . சக்தி ஸ்தலங்கள் நாடு முழுவதும் இருந்தாலும் அதில் பிரத்யேகமாக வடக்கு பார்த்த ஸ்தலங்கள் அதிக சக்தி கொண்டவையாக கருதப்படுகிறது . தமிழகத்தில் பட்டீஸ்வரம் துர்கை ஐவர்பாடி மகா பிரத்யங்கிரா தேவி துறையூர் வெக்காளியம்மன் மற்றும் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் வடக்கு பார்த்து அமைந்த சக்தி மிக்க ஸ்தலங்களாகும் .

மேட்டுப்பாளையத்திலிருந்து தேக்கம்பட்டி செல்லும் சாலையில் 5 கி மி தொலைவில் உள்ளது இக்கோயில் . வனப் பகுதியான இந்த இடத்திற்குள் நுழையும் போதே அன்னையின் அருளாற்றலை உணர முடிகிறது. சன்னிதிக்குள் நுழையும் போது வலப்புரம் விநாயகரும் இடப்புறம் சுப்ரமண்யரும் வீற்றிருக்கிறார்கள் . வழக்கமாக காளி கோயிலில் இருப்பது போல் கோரமான தோற்றம் இங்கு அன்னைக்கு இல்லை. சாந்த ஸ்வருபத்துடன் திரிசூலம் ஏந்தி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் . அதை தவிர இங்கிருக்கும் மூலவர் திருமேனி சுயம்புவாக லிங்க வடிவில் உள்ளது . இது அதிக ஆற்றல் வாய்ந்ததாக கூறுகிறார்கள் . இவ் விறு திருமேனிகளும் கருவறையிலேயே அமைந்திருப்பது அதீத சக்தியை அளிக்கிறது.

முன்னொறு காலத்தில் இந்த பகுதியை ஒட்டியுள்ள நீலமலைத்தொடரில் பாகாசுரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான் அவன் பெருந்தீகிக்காரனாக இருந்தான் . இந்த பகுதி மக்கள் அவனுக்கு உணவுகளை மாட்டு வண்டிகளில் தினமும் அனுப்பினர். சில சமயம் உணவு போதாமல் மாடுகளையும் மனிதர்களையும் கூட அவன் விழுங்கி விடுவதுண்டு . வன வாசத்தில் இருந்த பாண்டவர்களில் ஒருவரான பீமன் இதை கேள்விப்பட்டு அந்த அசுரனை கொல்ல முடிவு செய்தான். அவனை கொல்ல கிளம்புமுன் இப்பகுதியில் உள்ள காளியை வழிபட்டு சென்றதாக நம்பபடுகிறது. பாகாசுரனை பீமன் கொன்ற பிறகு இங்குள்ள காளி தேவிக்கு காவல் பூதமானான் இன்று இங்கு பாகாசுரன் சிலையும் பீமன் சிலையும் இருக்கிறது . ஊட்டி செல்லும் வழியில் 52 ஆவது வளைவில் உள்ள பாராசுரன் கோட்டை இந்த செய்திக்கான சான்றாக அமைந்துள்ளது .

இங்குள்ள பவானி ஆற்றில் மூழ்கி எழுந்து காளியை வழிபட்டால் பில்லி சூன்யம் போன்ற தொந்தரவுகள் தீய சக்திகள் நீங்குகிறது . அமாவாசை பெளர்ணமி போன்ற நாட்கள் இங்கு மிக விஷேஷமான பிராத்தனை நடக்கிறது . ஆடி அமாவாசை வெள்ளி செவ்வாய் நாட்களில் பக்தர்கள் அதிகம் கூடு கிறார்கள. திருமணம் மற்றும் புத்திர பாக்யம் வேண்டுவோர் பவானி ஆற்றில் உள்ள உருண்டை கற்களை எடுத்து மஞ்சள் பூசி துணியில் முடிந்து இங்கு தல விருட்சமாக உள்ள தொரத்தா மரத்தில் கட்டுகிறார்கள் .

இது போன்ற வேண்டுதல்கள் யாவும் இங்கு நிறைவேறுகின்றன. பத்ரம் என்பதற்கு மங்கலம் என்று பொருள் தன்னை நாடி வருபவர்களுக்கு மங்களத்தையும் வேண்டும் வரத்தையும் தருபவள் இந்த வனபத்ரகாளி .

Next Story
கதிர் தொகுப்பு
Trending News