Kathir News
Begin typing your search above and press return to search.

சூட்சுமம் நிறைந்த சர்ப வழிபாடு, நாகர்கென்ற தமிழகத்தில் இருக்கும் பிரத்யேக தலம்.!

சூட்சுமம் நிறைந்த சர்ப வழிபாடு, நாகர்கென்ற தமிழகத்தில் இருக்கும் பிரத்யேக தலம்.!

சூட்சுமம் நிறைந்த சர்ப வழிபாடு, நாகர்கென்ற தமிழகத்தில் இருக்கும் பிரத்யேக தலம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 July 2020 2:31 AM GMT

சர்பங்களும் விருட்சங்களும் சூட்சம சக்தி பெற்றவை . இவைகளை வழிபடுவது நம் நாட்டில் தொன்று தொட்டு நடந்து வருகிறது . பொதுவாக நாக தெய்வ சிலைகள் சிவாலயத்தின் பின்புறம் அரச மரத்தடியில் விநாயகருடன் இருக்கும்.

நாகர்களுக்கென்றே சுயம்புவாக எழுந்தருளிய நாகராஜா கோயில் கன்யாகுமாரியில் இருந்து 20 கி.மி. தொலைவில் உள்ள நாகபட்டினத்தில் உள்ளது . இது ஒரு நாக தோஷ பரிகார ஸ்தலமாகும் . இங்கு பின்னியிருக்கும் நாகங்களுக்கு அபிஷேகம் செய்தால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் . திருமணத் தடை நீங்க . குழந்தை பாக்யம் பெற இந்த ஸ்தலம் அற்புதமான ஸ்தலமாகும்

இந்த கோயிலில் புற்று மண் பிரசாதமாக தரப்படுகிறது . இந்த மண்ணை பூசிக் கொண்டால் சரும வியாதிகள் மற்றும் நோய்கள் குணமடை கிறது . இந்த கோயில் முன்னொரு காலத்தில் வயல்வெளியாக இருந்ததால் புற்று மண் ஈரப்பதமாக இருக்கிறது மேலும் இது அள்ள அள்ள குறையாமலும் 6 மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறுவதாகவும் உள்ளது இங்குள்ள அதிசயமாகும் .

இந்த நாகராஜா கோயிலின் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் அதீத சக்தி கொண்டவை. திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை அன்று வேப்ப மரத்துடன் இருக்கும் விநாயகரையும் அருகில் உள்ள நாகர்களின் சிலையையும் சேர்த்து சுற்றினால் தோஷங்கள் விலகும் . சிலர் கடும் விரதம் இருந்து 108 முறை கூட சுற்றி வருகிறார்கள். இந்த கோயிலில் பக்தர்களும் நாகத்தை பிரதிஷ்டை செய்யலாம் . குழந்தை இல்லாத தம்பதிகள் ஒரு நாள் முழுக்க விரதம் இருந்து நாகர் சிலையை தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் அப் படி செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதிகம்

இந்த கோயிலின் பிரகாரத்தில் இது போன்று நூற்றுக்கணக்கான கற்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன . தமிழகத்தில் நாகருக்கென்றே பிரத்யேகமாக அமைந்துள்ள ஒரே சன்னிதி இதுதான் . இங்குள்ள துர்கை சிலை கோயில் தீர்த்தமான நாக தீர்க்கத்தில் கிடைத்தது அதனால் இந்த துர்கைக்கு தீர்க்த துர்கை என்று பெயர். இந்த துர்கைக்கு செவ்வாய் அன்று ராகு காலத்தில் எழுமிச்சை தீபம் ஏற்ற ராகு கேது தோஷம் விலகும் .

Next Story
கதிர் தொகுப்பு
Trending News