Kathir News
Begin typing your search above and press return to search.

பூலோகத்தின் தேவதையான இவரை வணங்கினால் நிகழும் ஆச்சர்ய பலன்கள்.!

பூலோகத்தின் தேவதையான இவரை வணங்கினால் நிகழும் ஆச்சர்ய பலன்கள்.!

பூலோகத்தின் தேவதையான இவரை வணங்கினால் நிகழும் ஆச்சர்ய பலன்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 2:28 AM GMT

சண்டி தேவி வழிபாடு

கலியுகத்தில் கணேசனும் சண்டி தேவியும் உடனடியாக வேண்டிய வரம் தருவார்கள் என்பது ஐதீகம், சப்த சதி என்று அழைக்கப்படும் தேவி மஹாமியம் 700 பாடல்களை கொண்டது அது துர்கா தேவியான சண்டிகா தேவியை பற்றி கூறுகிறது. இந்த மந்திரங்களை நவராத்திரி நாளில் பாராயணம் செய்து வந்தால் சர்வ கரிய வெற்றி உண்டாகும். தேவி மஹாமியத்தில் வரும் துர்கா சப்த ஸ்லோகி எனும் பகுதி மிகவும் சக்திவாய்ந்த பகுதியாகும்.

சர்வ லோகத்திற்கும் ஒவ்வொரு தேவதையை அதிகாரியாக நியமித்துள்ளார், அதன்படி பூலோகத்திற்கு மஹாசக்தியான துர்கை அதிபதியாக இருக்கிறாள் சண்டி ஹோமம் என்பது துர்கையின் அம்சமான சண்டி தேவியை வழிபட்டு நம்மை காத்து எதிரிகள் தொலையில் இருந்த்து விடுப்படுவதற்காக இந்த யாகம் செய்யப்படுகிறது. உலகின் அன்னையாக திகழ்ந்து உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளையும் காத்து ரட்சிக்கும் வல்லமை கொண்டவளாக திகழும் சண்டி தேவி யை வணங்கினால் நம்மை பாதுகாத்து ரட்சிப்பாள். இப்பிறவியிலும் முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்கள், நம்மை முழுமையான வாழ்க்கை வாழவிடாமல் செய்யும் சாபங்கள் போன்றவற்றை இந்த யாகம் களைந்து நம்மை பாதுகாக்கும். இந்த யாகத்தின் மூலம் நம் உடல் ஆன்ம மனம் எல்லாம் தூய்மையடையும்.

இந்த யாகத்தை செய்வதால் எதிர்களே ஒருவருக்கு இல்லாமல் போவார்கள், சமூக அந்தஸ்து பொருளாதார உயர்வு, நம்மை சூழ்ந்திருக்கும் தீமைகள் தானாக விலகும் நம் அறிவையும் ஆற்றலையும்மேம்படுத்தி அமைதியை தரும்

இந்த ஹோமத்தில் 1000 தீர்க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த மந்திரங்கள் ஓதப்படும் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இந்த யாகத்தில் பங்கேற்கவைத்து அவர்களுக்கு புத்தாடை பிரசாதம் பிரத்யேகமாக வழங்கப்படும், அவர்கள் இந்த யாகத்தில் அன்னை துர்கா தேவியாக உருவகிக்கப்படுவார்கள். வருடத்திற்கு ஒரு முறை இந்த யாகத்தை தவறாமல் செய்து வருவது ஒருவருக்கு மிகப்பெரிய ஆற்றலை தரும், இந்த யாகத்தை செய்ய முடியாவிட்டாலும் இதில் பங்கு பெறுவது பெரிய நன்மைகளை தரும். "ஐம் ஹ்ரீம் க்ளீன் சமுண்டாய விச்சி " என்கிற மந்திரம் சண்டி ஹோமத்தில் பயன்படுத்தப்படும் மந்திரம் இதை யாகம் செய்வித்ததுடன் நாமும் தினமும் பயன்படுத்தலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News