Kathir News
Begin typing your search above and press return to search.

மிகவும் சக்தி வாய்ந்த க்ரியா – சுதர்சன க்ரியா? செய்வதெப்படி? அதன் பலன்கள் என்ன?

மிகவும் சக்தி வாய்ந்த க்ரியா – சுதர்சன க்ரியா? செய்வதெப்படி? அதன் பலன்கள் என்ன?

மிகவும் சக்தி வாய்ந்த க்ரியா – சுதர்சன க்ரியா? செய்வதெப்படி? அதன் பலன்கள் என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 July 2020 2:16 AM GMT

க்ரியா என்பது ஒரு யோக முறை. அடிப்படையில் க்ரியா என்பது செயல் அல்லது இயக்கம் என்பதை குறிக்கும். உடல் மற்றும் மனதை ஒரு குறிப்பிட்ட வழியில் அல்லது அதிர்வில் இயக்குவது அல்லது செயல்படவைப்பது க்ரியா யோகமாகும். இந்த யோக முறை தற்போது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வருகிறது. கிரியா யோகம் பல வகைப்படும் என்றாலும் அதில் மிக மிக சக்தி வாய்ந்தது சுதர்சன க்ரியா எனப்படும் பயிற்சி.

இந்த பயிற்சி பல ஞானிகளாலும் சித்தர்களாலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை பெறுவதற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த பயிற்சியின் அடிப்படை மிக எளிமையானது. முதுகுத்தண்டை நேராக வைத்து அமர்ந்து கண்களை மூடி நாசியின் நுனியில் கவனத்தை வைத்து கொள்ளவேண்டும். பிறகு வலது கை காட்டை விரலால் வலது நாசியை மூடி இடது நாசியின் வாயிலாக ஆழமாக மூச்சை உள்ளவங்க வேண்டும் பிறகு வயிற்று பகுதியை அழுத்தமாக உள்வாங்கி இறுக்கமாக சிலநிமிடங்கள் வைத்து விட்டு மீண்டும் இலகுவாக்கிக்கொண்டு இடது வலது நாசியில் இருந்து விரலை எடுத்து இயல்பாக மூச்சு விட வேண்டும்

பிறகு அதே போல் இடது நாசியை இடது கை பெருவிரலால் மூடிக்கொண்டு மூச்சை வலது நாசி வழியாக உள்ள இழுத்து வயிற்றை உள்பக்கமாக இழுத்து இருக்கமாக்கிக்கொள்ள வேண்டும் சிலநிமிடங்கள் களைத்து வயிற்றை இலகுவாக்கி இடது நாசியில் இருந்து விரலை எடுத்து விட்டு இயல்பாக மூச்சு விடவேண்டும். இப்படி செய்தால் ஒரு முழு சுற்று முடிவடையும். இப்படி 16 முறை செய்ய வேண்டும் பிறகு வலது நாசி வழியாக மூச்சை இழுத்து இடது நாசி வழியாக மூச்சை விடவேண்டும். இதை 16 முறை தொடர்ந்த செய்யா வேண்டும். இதை செய்யும் போது "ஸோஹம் " அல்லது "வாஹ் குரு" போன்ற மந்திரங்களை இரண்டு பகுதிகளாக பிரித்து சொல்லலாம். இதை 3 நிமிடங்கள் அல்லது 11 நிமிடங்கள் அல்லது 32 அல்லது 62 நிமிடங்கள் நமக்கு கிடைக்கும் நேரத்தை பொறுத்து செய்யலாம். இது ஒரு அற்புதமான யோகமாகும் இதை தொடர்ந்து செய்து வர உடல் மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக பல நன்மைகள் மற்றும் சித்திகள் கைகூடும்

அதே வேளையில் ஆன்மீக பயிற்சிகள் அனைத்தையும் முறையான குருவின் மூலம் கற்றுக்கொள்வதே ஆன்மீக மரபில் பரிந்துரைக்கப்படும் உகந்த முறையாகும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News