Kathir News
Begin typing your search above and press return to search.

இக்கோவிலில் ஒரு திருச்சுற்று செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் அதிசயம்.!

இக்கோவிலில் ஒரு திருச்சுற்று செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் அதிசயம்.!

இக்கோவிலில் ஒரு திருச்சுற்று செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் அதிசயம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 2:03 AM GMT

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மனநோய் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் தலமாகும் . இது சிவனே தன்னை வழிபட்ட தலமாகும். பாண்டிய மன்னன் வர குண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலம் இது . முன்பின் அறியாதவரை பணத்திற்காக துன்புறுத்துதல் , குடும்பங்களை பிரிப்பது, போன்ற செயல்களால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் .

இதனால் , ஏற்படும் முதல் பாதிப்பு மனநோயாகும். இப்படி தோஷங்களால் ஏற்படும் மன நோயை தீர்பது கடினம் . ஆனால் இந்த தலத்தில் பிரம்மஹத்தி தோஷத்தால் ஏற்படும் மனநோய் மறைகிறது . மனநிலை சரியில்லாத ஏராளமானவர்களை மகாலிங்கேஷ்வரர் முன் நிறுத்தி வழிபடுகிறார்கள் . இங்குள்ள காருண்யாமிர்த தீர்த்தத்தில் காலை மாலை குளித்து சுவாமியின் முன் நின்று தரிசனம் செய்தால் அவரே மருத்துவராகி நோய்களை குணப் படுத்துகிறார் . திருமண தடை பித்ரு தோஷம் குழந்தையின் மை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபட்டாலே பிரச்சனைகள் தீருகின்றன .

பாண்டிய மன்னன் வர குண பாண்டியனின் குதிரை பிராமணன் ஒருவனை மிதித்து கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு மனநோய்க்கு ஆளானான் . அப்போது திருவிடை மருதூர் சென்று வழிபடுமாறு அசிரீரி கேட்டது . அதை கேட்டு திருவிடைமருதூர் கோயிலுக்குள் மன்னன் சென்ற போது அவனை பின் தொடர்ந்த பிரம்மஹத்தி ஈசன் முன்பு வர அஞ்சி வெளியே வரும் போது பிடித்துக் கொள்ளலாம் என்று வாசலில் அமர்ந்தது . மகாலிங்கத்தின் முன்பு நின்று வழிபட்ட மன்னன் குணமடைந்தான் பிறகு இறைவனின் உத்தரவுபடி வந்த வழியே செல்லாமல் வேறு வாசல் வழியாக மீண்டு சென்றான் . இப்போதும் வழிபாடு செய்வோர் உள்ளே சென்று வழிபட்டு வந்த வழியே திரும்பாமல் அருகில் உள்ள முகாம் பிகை சன்னதி வாசல் வழியாகவே திரும்ப வேண்டும் .

பல சித்தர்களால் இந்த தலம் பாடபெற்றுள்ளது. பத்ரகிரியார் முக்தியடைந்த தலம் இதுவே . இங்குள்ள அசுவமேத திருசுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனை பெற முடியும் .

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழி தடத்தில் இந்த திருவிடைமருதார் அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News