Kathir News
Begin typing your search above and press return to search.

பாற்கடலை கடைந்த வாசுகி பாம்பு, இங்கு கோவில் மணியாக இருக்கும் அதிசய திருத்தலம்.!

பாற்கடலை கடைந்த வாசுகி பாம்பு, இங்கு கோவில் மணியாக இருக்கும் அதிசய திருத்தலம்.!

பாற்கடலை கடைந்த  வாசுகி பாம்பு, இங்கு கோவில் மணியாக இருக்கும் அதிசய திருத்தலம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2020 2:07 AM GMT

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வடக்கநாதர் திருக்கோயில் . அமர்நாத் பனிலிங்கம் பனியால் ஆனது போல் இந்த லிங்கம் முழுக்க முழுக்க நெய்யால் உருவானது . 12 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த நெய் லிங்கம் கல்லை போல் கெட்டியாக இறுகி உள்ளது

நெய் எப்போதாவது உருகி வெளிப்பட்டாலும் அதிசயமாக உருகி மறைந்து விடுகிறது . இங்குள்ள மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்கின்றனர். மூலவருக்கு பன்னீர் சந்தனம் போன்றவற்றை அபிஷேகம் செய்தாலும் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இங்குள்ள தீபத்தின் வெப்பமோ வேறு எந்த சூடோ இந்த நெய்யை உருக்கி விடுவதில்லை .

பூச்சிகளாலும் இதற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை . இந்த லிங்கத்தை பாதுகாக்க பெரிய கவசத்தை அணிவித்திருக்கிரார்கள் . இங்கு உள்ள நந்தீஸ்வரர் தனி சந்நிதியில் விலகி இருக்கிறார் . மேலும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய பயன்படுத்திய வாசுகி என்கிற பாம்பு இங்கு வாயிலில் கோயில் மணியாக இருக்கிறது. இதை அர்ச்சகர் மட்டும் பிரதோஷ காலங்களில் பூஜையின் போது அடிப்பார். பக்தர்கள் யாரும் தொட அனுமதி இல்லை. இத்த தலம் காசிக்கு நிகரான தலம் என்று கூறப்படுகிறது . இங்குள்ள வடக்கு நாதரை தரிசித்தால் காசிநாதரை தரிசித்த பலன் கிடைக்கும் .

ஆதி சங்கரரின் பெற்றோரான சிவகுருவும் ஆர்யாம்பாளும் இந்த தலத்திற்கு வந்து வேண்டிய பிறகு தான் சங்கரர் அவதரித்தார். இத்தலத்தின் புராணப்படி இங்கு ஈசனுக்கும் அர்ஜுனனுக்கும் விற்போர் நடந்ததாகவும் அதில் அர்ஜுனனின் ஒரு அம்பு ஈசனின் தலையில் பட்டு ரத்தம் வழிந்ததால் தேவ மருத்துவர் தன்வந்த்ரி அவர் தலையில் நெய்யால் தடவி குணப்படுத்தியதாகவும் கூறுகிறார்கள் .

பரசுராமரே இங்கு வழி பட்டதாக சொல்கிறார்கள் . இங்கு லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை பிராசாதமாக தருகி றார்கள் . இது நாட்பட்ட வியாதியையும் மலட்டுத் தன்மையையும் சரிப்படுத்துகிறது. இரவு 8 மணிக்கு நடைபெரும் திருக்காப்பு பூஜையை தினமும் 41 நாட்கள் தொடர்ந்து தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் .

பல ஆண்டுகளாக நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த நெய்யே லிங்கமாக சுமார் நான்கு அடிக்கு உறைந்திருக்கிறது . இன்றும் நூற்றுக்கணக்கான விளக்குகள் இருந்தாலும் லிங்கம் உருகாமல் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News