Kathir News
Begin typing your search above and press return to search.

உரம் வாங்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து சாவு - ஒரு உயிரின் இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் ராஷ்டிர சமிதி அரசு.!

உரம் வாங்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து சாவு - ஒரு உயிரின் இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் ராஷ்டிர சமிதி அரசு.!

உரம் வாங்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து சாவு - ஒரு உயிரின் இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் ராஷ்டிர சமிதி அரசு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Sept 2019 7:55 PM IST


தெலுங்கானாவில் யூரியா-வுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டுறவு சங்கங்களில் உரம் வாங்குவதற்கு விவசாயிகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றனர். இந்த விஷயத்தை கையாள தெரியாத மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசு, மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீது குறை கூறி வருகிறது.


தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் தொகுதியான துப்பகா தொகுதியில், இன்று காலை யூரியா உரம் வாங்குவதற்காக வரிசையில் நின்ற விவசாயி திடீரென மயங்கி விழுந்தாது சிறிது நேரத்தில் இறந்துபோனார். இந்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மாநில அரசின் திட்டமிடல் சரியாக இல்லை என்பது தெளிவாகியுள்ளது.


ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து மாநில அரசு மக்களிடம் பிரச்சாரம் செய்தது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கத்தின் திட்டமிடல் மற்றும் செயல்திறன் சரியாக இல்லாததால் விவசாயிகள் துயரத்தை சந்தித்து வருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.


மாநில விவசாயத் துறையின் தவறான நிர்வாகம் மற்றும் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்துக்கு மத்திய அரசின் சார்பில் 8.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வெறும் 6.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியாதான் தேவைப்படுகிறது. முன்னதாகவே பருவ காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தேவையான யூரியா அனுப்பப்பட்டுவிட்டது. எனினும், போதிய திட்டமிடல் இல்லை. அது தான் விவசாயின் இறப்புக்கு காரணம்' என்று கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News