போலீசாரின் செயலுக்கு காய்கறிகளை சாலையில் கொட்டி எதிர்ப்பைப் பதிவு செய்த விவசாயி, என்ன நடந்தது ?
போலீசாரின் செயலுக்கு காய்கறிகளை சாலையில் கொட்டி எதிர்ப்பைப் பதிவு செய்த விவசாயி, என்ன நடந்தது ?

திருவள்ளூர் மாவட்டம் அகரம் கண்டிகை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவர் காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு சந்தையில் விற்பதற்காக திருவள்ளூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார் அப்போது தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் அவரை வழிமறித்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக அரசு அத்தியாவசிய தேவைக்காக காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் வெளியே செல்லலாம் என்றும் அதே போல காய்கறிகளை விவசாயிகள் எடுத்துச் சென்றும் விற்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் விவசாய கார்த்திக் தான் எடுத்து செல்வது காய்கறிகள் என்றும் என்னை விட்டு விடுங்கள் என்றும் பலமுறை மன்றாடி உள்ளார். ஆனால் வெங்கல் காவல் துறையினர் இதை துளியும் மதிக்காமல் காலை 8 மணி முதல் 11 மணி வரை விவசாயி கார்த்திகை சிறை பிடித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி தான் வைத்திருந்த காய்கறி மூட்டைகளை சாலையில் கொட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார், அதன் பின்னர் விவசாயி கார்த்திகைப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி போலீசாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.