Kathir News
Begin typing your search above and press return to search.

வேகமாக வளரும் பொருளாதாரம் - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்பதே உலகுக்கு ஜனநாயகத்திற்கான மிகச்சிறந்த விளம்பரம் ஆகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வேகமாக வளரும் பொருளாதாரம் - பிரதமர் மோடி பெருமிதம்

KarthigaBy : Karthiga

  |  30 March 2023 10:00 AM GMT

ஜனநாயகத்துக்கான அமெரிக்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி முறையில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது இந்தியா ஜனநாயகத்தின் தாய் என. பெருமிதத்துடன் கூறினார். இதற்காக முற்கால வேதங்கள் இதிகாசங்களில் இருந்து எடுத்துக்காட்டுகளை அவர் விவரித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-


தலைவர்களை தேர்வு செய்வது என்ற யோசனை உலகின் பிற பகுதிகளுக்கு முன்பே பண்டைய இந்தியாவின் ஒரு பொதுவான அம்சமாக இருந்தது. எங்கள் இதிகாசமான மகாபாரதத்தில் குடிமக்களின் முதல் கடமை தங்களின் தலைவர்களை தேர்ந்தெடுப்பது என்று விவரிக்கப்பட்டுள்ளது .எங்கள் புனித வேதங்கள் பரந்த அடிப்படையிலான அரசியல் அதிகாரத்தை பேசுகின்றன. பண்டைய இந்தியாவில் குடியரசுகள் பற்றி பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. அங்கு ஆட்சியாளர்கள் பரம்பரையாக இல்லை. உண்மையில் இந்தியா ஜனநாயகத்தின் தாயாகும்.


ஜனநாயகம் என்பது வெறும் ஒரு கட்டமைப்பு அல்ல. அது ஒரு உத்வேகமும் கூட .ஒவ்வொரு மனிதனின் தேவைகளும் விருப்பங்களும் முக்கியம் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது .அதனால் தான் இந்தியாவில் எங்கள் வழிகாட்டும் தத்துவம் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக ஒன்றாக பாடுபடுவது ஆகும். வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது, விநியோகம் மூலம் தண்ணீர் சேமிப்பு, அனைவருக்கும் சுத்தமான சமையல் எரிபொருளை வழங்குவது என ஒவ்வொரு திட்டமும் இந்திய குடிமக்களின் கூட்டு முயற்சிகளால் இயக்கப்படுகிறது .


கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் மக்களால் இயக்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை 200 கோடிக்கும் அதிகமான டோஸ்களை வழங்குவதை சாத்தியமாக்கியது அவர்களால்தான். தடுப்பூசி மைத்திரி தட்டத்தின் மூலம் கோடி கணக்கான தடுப்பூசிகளை உலகத்துடன் பகிர்ந்துள்ளது.


இது ஒரு பூமி, ஒரு குடும்பம் ,ஒரே எதிர்காலம் என்ற வாசு தெய்வ குடும்பகத்தின் ஜனநாயக உணர்வால் பயன்படுத்தப்பட்டது. ஜனநாயகத்தின் நற்பண்புகளை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எனினும் இதை மட்டும் சொல்கிறேன். அதாவது பல உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதுவே உலகின் ஜனநாயகத்திற்கான சிறந்த விளம்பரம் ஜனநாயகத்தை வழங்க முடியும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News