20 நாடுகளில் பரவிய ஒமைக்ரான் வைரஸ்: அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து புதிதாக உருமாறிய வைரசாக ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் குறைந்த நாட்களிலேயே அதன் கால்தடம் அனைத்து நாடுகளிலும் பரவத்தொடங்கி விட்டது.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து புதிதாக உருமாறிய வைரசாக ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் குறைந்த நாட்களிலேயே அதன் கால்தடம் அனைத்து நாடுகளிலும் பரவத்தொடங்கி விட்டது. மேலும், இது போன்ற வைரஸ்கள் 50 வகையில் உருமாற்றம் அடையும் என விஞ்ஞானிகள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தற்போதைய நிலையில் 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி கூறியுள்ளார்.
இது குறித்து ஆண்டனி பாசி மேலும் கூறும்போது, இது டெல்டா போன்ற பிற வகையிலான வைரஸ்களில் இருந்து மிகவும் வித்தியாசமான முறையில் உருமாற்றங்களை செய்து வருகிறது. இருந்தபோதிலும் இது வேகமாக பரவுகிறதா என்பதனை கண்டறிவதில் மிகவும் சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: Daily Thanthi
Image Courtesy:The Indian Express