FCRA விதியை மீறிய தூத்துக்குடி மறைமாவட்ட சங்கம்.. அமித் ஷாவிடம் சென்ற கடிதம்..
By : Bharathi Latha
தூத்துக்குடியில் உள்ள 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெற்றதில் முறைகேடு செய்ததாக அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆந்திராவின் நரசிம்மபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி. ரகு ராமகிருஷ்ண ராஜு கனுமுரு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இது குறித்து அவர் கடிதத்தில் கூறும் பொழுது, 2015 பிப்ரவரி 25-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நட்சத்திரமிடப்படாத கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு, புலனாய்வு அமைப்புகளின் பாதகமான அறிக்கைகளால் FCRA பதிவுகள் நிறுத்தப்பட்டு தூத்துக்குடி மறைமாவட்ட சங்கத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன என்று தெரிவித்தார். அதன் பின்னர் 1860-ம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டம் XXI-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட தூத்துக்குடி மறைமாவட்ட சங்கம், ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. NGO தர்பன் போர்ட்டலின் கீழ் செயல்படும் அதன் முதன்மை நோக்கங்கள், போர்ட்டலில் விவரிக்கப்பட்டுள்ளபடி, குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலனுக்காகப் பணியாற்றுவது அடங்கும்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்கள், பிரத்யேக தத்தெடுப்பு நிறுவனங்கள், மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான இல்லங்கள், மீட்பு இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், மத ஸ்தலங்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் சங்கம் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தவறான வழியில் பெறுவதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்து இந்த இரண்டு தன்னார்வ நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நிதியை பெறுவதில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது நிதியை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கம் தனது முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து வெளிநாட்டு நிதியை சிண்டிகேட் வங்கியின் மற்றொரு கணக்கிற்கு மாற்றியதாகவும், கட்டுமான நிறுவனங்களுக்கு நிதி பரிமாற்றம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்களின் பின்னணியில் உள்ள காரணங்கள், குறிப்பாக கட்டுமான நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட கணிசமான தொகையான ₹1.25 கோடி, விசாரணை தேவை என வலியுறுத்தப்படுகிறது. குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், வெளிநாட்டு நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் சாத்தியமான சட்ட மீறல்கள் குறித்து கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும்.
Input & Image courtesy: News