Kathir News
Begin typing your search above and press return to search.

5-ஜி சேவையின் சிறப்புகள் என்ன தெரியுமா?

5-ஜி தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். இந்த 5-ஜிசேவையில் என்னென்ன சிறப்புகள் என்பது பற்றிய தகவல்

5-ஜி சேவையின் சிறப்புகள் என்ன தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  2 Oct 2022 7:15 AM GMT

5-ஜி சேவை அதிவேக இணைப்பினை ஏற்படுத்தி தரும். அதிக நம்பகத்தன்மை, அதிக நெட்வொர்க் திறன் கொண்டிருக்கும். 4-ஜி தொலைத்தொடர்பு சேவையின் இணையதள வேகத்தை விட இந்த 5-ஜி தொலைத்தொடர்பு சேவை இணையதள வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும். இணையவேகம் மட்டுமல்ல தரவு, பரிமாற்றம் தொடங்குவதற்கு முன்பாக சில வினாடிகள் தாமதம் ஏற்படும். இது 'லேட்டன்சி' எனப்படும். 5-ஜியில் இந்த தாமதம் மிக மிக குறைவாக இருக்கும். அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களும் 5-ஜி சேவையை வழங்கக்கூடிய திறன் கொண்ட செல்போன்களை அறிமுகம் செய்துள்ளன. உங்கள் செல்போனில் அந்த திறன் இருக்கிறதா என்பதை விசாரித்து அறியுங்கள்.


அந்த திறன் இருந்தால் புதிய 5-ஜி செல் ஃபோன் வாங்க வேண்டியதில்லை. உங்கள் செல்போனில் அந்த திறன் இல்லாத போது 5-ஜி திறன் கொண்ட செல்போன் வாங்க தான் வேண்டும். புதிய சிம்கார்டு வாங்க தேவை இருக்காது. எதிர்காலத்தில் 5-ஜி தொழில்நுட்பத்தை விவசாயம், நவீன விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். ஆர்.எப். ஐ. டி சென்சார்கள் மற்றும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் ஆடு, மாடுகளின் இருப்பிடத்தை கண்காணித்து எளிதாக நிர்வகிக்க முடியும்.


நவீன அறுவை சிகிச்சைகளை செய்வதில் டாக்டர்களுக்கு இந்த 5-ஜி தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். எல்லாம் சரி கட்டணம் எவ்வளவு என்கிறீர்களா? 5ஜி கட்டண விவரத்தை இன்னும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. ஆனால் 4-ஜி யை விட 5-ஜிக்கு அதிக கட்டணம் செலவிட வேண்டியது இருக்கும்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News