₹ 1.25 லட்சம் கோடிக்கு மேல் தீபாவளி விற்பனை: அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தகவல்!
சில்லறை தீபாவளி விற்பனையானது 1.25 லட்சம் கோடிக்கு மேல் ஆகியது என்று அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தகவல்.
By : Bharathi Latha
நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 26ம் தேதி முதல் தற்போது அக்டோபர் 23ஆம் தேதி வரை இந்திய முழுவதும் சில்லறை விற்பனைகளில் எண்ணிக்கை அதிகமாகவே நடத்தியது. இதன் மூலம் சில்லறை விற்பனையாளர்களுக்கு 1.25 லட்சம் கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தகவல்கள் கூறுகிறது. மேலும் இந்த ஆண்டில் டிஜிட்டல் பேமென்ட் முறை மூலமாக அதிகமான பணம் டிஜிட்டல் வழியாக செலுத்தப்பட்டுள்ளது.
அதிகமாக இந்த தீபாவளி எப்போதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆத்மநிர்பார் என்ற திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முற்றிலும் இந்தியாவை சார்ந்த பொருட்கள் தான், உள்ளூர் வணிகர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் தான் இந்த முறை தீபாவளியில் மக்கள் அதிகமாக வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக மேட் இன் இந்தியா பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை விற்பனையானது சிலரை விற்பனையாளர்களுக்கு கிடைத்த வர பிரசாதமாகும். பல்வேறு தரப்பு மக்களும் இந்த பண்டிகையின் போதும் பொருட்களை அதிகமாக வாங்குகிறார்கள் என்றும் கூறுகிறது அறிக்கை. மாறிவரும் வணிகச் சொல்லி காரணமாக டிஜிட்டல் பேமென்ட் அதிகமாக மக்கள் விழிப்படைந்து இருக்கிறார்கள். தங்கள் வாங்கும் பொருட்களுக்கு டிஜிட்டல் வழியாக பணத்தை செலுத்தி ஜி.எஸ்.டி போன்றவற்றை முறையாக செலுத்தி வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Economic Times