நாமக்கலில் உள்ள கோவில் தேரில் தீ விபத்து - தெய்வக்குற்றமா? பக்தர்கள் கூறுவது என்ன?
நாமக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் தேர் விழாவின் போது தீ விபத்து ஏற்பட்டது தெய்வ குற்றம் இருப்பதாக பக்தர்கள் கருத்து.
By : Bharathi Latha
நாமக்கல்லில் உள்ள கோவிலில் தேர் விபத்தின் போது தீ விபத்து ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் தஞ்சாவூரில் நடைபெற்றிருப்பது அடுத்து இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தீ இதுகுறித்து, தெய்வ குற்றம் நேர்ந்ததாக பரிகார பூஜைகள் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நாமக்கலில் உள்ள இ. பி காலனியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
எனவே மாரியம்மன் கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. கோவில் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்து தேரை சுற்றிப் வந்தார்கள். நேற்று பரமத்தி சாலையில் தேர் சென்று கொண்டிருந்தபோது போலீஸ் DSP அலுவலகம் எதிரில் உயர் மின்னழுத்த கம்பியில் தேர் மோதாமல் இருப்பதற்காக மின் வாரிய ஊழியர் குமரேசன் என்பவர் நீண்ட குச்சியால் மின் கம்பியை தூக்கிப் பிடித்தார். மேலும் இப்படி செய்ததில் மின் இணைப்பு துண்டிக்கப் படாமல் இருந்ததில் கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதி தீ விபத்து ஏற்பட தொடங்கியது.
தீப்பொறி தேரின் மீது விழுந்ததில் தேரின் சில பகுதிகளில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு படையினர் போராடிய நிலையில்தான் தீயை அணைத்தனர். இதில் காயம் அடைந்த மின் ஊழியர் குமரேசன் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த தீ விபத்து குறித்து பக்தர்கள் தெய்வக்குற்றம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
Input & Image courtesy: Malaimalar news