UPSC தேர்வு: முதல் நான்கு இடங்களில் பெண்கள், தமிழக பெண்கள் இடம் பெற்றுள்ளார்களா?
UPSC தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன, இதில், முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர்.
By : Bharathi Latha
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகிறது. மூன்று கட்டங்களைக் கொண்ட இந்தத் முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு நேர்காணல் என்று மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், UPSC தேர்வை எழுதலாம். இதில் நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மூன்று கட்டங்களில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. IAS, IPS, IRS, IFS, group A, Group B பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது மேலும் அக்டோபர் 29ஆம் தேதி தேர்வு முடிவுகள் கிடைத்ததும் தேர்ச்சி பெற்றோர் முதன்மை தேர்வுக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 7 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியாகின.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஏப்ரல் 5ஆம் தேதி நேர்முகத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. முதல் நான்கு இடத்தையும் தற்போது பெண்கள் பின்பற்றுகிறார்கள். இதில் முதல் இடத்தை ஸ்ருதி சர்மா என்ற மாணவி பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை அங்கிதா அகர்வால் என்ற பெண் பிடித்துள்ளார். 3ஆவது இடத்தை காமினி சிங்லா என்ற பெண்ணும் 4ஆவது இடத்தை, ஐஸ்வர்யா வர்மா என்ற தேர்வரும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 42ஆவது இடத்தில், ஸ்வாதி ஸ்ரீ என்ற பெண் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: ABP News