Kathir News
Begin typing your search above and press return to search.

முதலாவது சி- 295 ரக போக்குவரத்து விமானம்: இந்திய விமான படையிடம் ஒப்படைப்பு!

முதலாவது சி- 295 ரக போக்குவரத்து விமானம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதலாவது சி- 295 ரக போக்குவரத்து விமானம்: இந்திய விமான படையிடம் ஒப்படைப்பு!

KarthigaBy : Karthiga

  |  26 Sep 2023 3:00 AM GMT

இந்திய விமானப்படையை தனது போக்குவரத்து தேவைக்காக அவ்ரோ-748 ரக விமானங்களை 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. அவை பழையதாகி விட்டதால் அவற்றுக்கு மாற்றாக ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சி-295 ரக நடுத்தர போக்குவரத்து விமானத்தை வாங்க முடிவு செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 21,935 கோடி செலவில் 56 சி-295 ரக போக்குவரத்து விமானங்களை தயாரித்து தர ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

2025 ஆம் ஆண்டுகள் 16 விமானங்களை பறக்கும் நிலையில் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மீத விமானங்களை இந்தியாவில் டாடா அட்வான்ஸ் நிறுவனம் தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஐதராபாத்தில் இந்த விமானங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த உதிரி பாகங்கள் கப்பல் மூலம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு விமானங்கள் உருவாக்கப்படும். இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முதலாவது ராணுவ விமானமாக இவை இருக்கும். இதற்கிடையே ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது சி-295 என்ற போக்குவரத்து விமானம் கடந்த 13-ஆம் தேதி இந்திய விமானப்படை தளபதி பி.ஆர் சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த விமானம் கடந்த 20-ஆம் தேதி வடோதராவுக்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் இந்த விமானத்தை விமானப்படையில் முறைப்படி சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் நடந்தது. ராணுவ மந்திரி கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் விமானம் இந்திய விமான படையின் 16வது படைப்பிரிவில் முறைப்படி சேர்க்கப்பட்டது. விமானப்படை தளபதி, விமானப்படை மற்றும் ஏர் பஸ் உயர் அதிகாரிகளௌ பங்கேற்றனர் . பின்னர் நடந்த சர்வ தர்ம பூஜையில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News