Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தோனேஷியாவில் முதல் இந்து பல்கலைக்கழகம்!

இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் இந்தோனேஷியாவில் முதல் இந்து பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் முதல் இந்து பல்கலைக்கழகம்!

KarthigaBy : Karthiga

  |  6 March 2024 11:21 AM GMT

மக்கள் தொகையில் உலகின் ஏழாவது பெரிய நாடாக திகழும் இந்தோனேசியாவில் 86 சதவீதத்திற்கும் மேல் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். அதிக இஸ்லாமிய மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையும் இந்தோனேசியாவுக்கு உள்ளது .17 ஆயிரத்துக்கு அதிகமான தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேஷியா உலகின் மிகப்பெரிய தீவு நாடாகவும் விளங்கி வருகிறது. இந்தோனேசியாவின் தலைநகராக ஜகார்த்தா உள்ளது .இது ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ளது .


இந்த நிலையில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பாலி தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர் .உலகளவில் சுற்றுலா மையமாக விளங்கும் இந்த பாலிதீவில் கடந்த 1993 ஆம் ஆண்டு இந்துமத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 1999 ஆம் ஆண்டு இந்து மத அரசு கல்லூரி ஆக தரம் உயர்த்தப்பட்டது. பாலி தீவின் தலைநகர் டென் பஜாரில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த கல்லூரி கடந்த 2004 ஆம் ஆண்டு இந்து மத அரசு நிறுவனமாக மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது .


இந்நிலையில் இந்நிறுவனத்துக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குமானையில் அதிபர் ஜோகோ விடோடோ கையெழுத்துள்ளா.ர் அதன்படி இந்தோனேசியாவின் முதல் இந்து பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது அதிபரின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இந்து பல்கலைக்கழகத்திற்கு ஐ கஸ்தி பகஸ் சுக்ரீவா ஸ்டேட் ஹிந்து யுனிவர்சிட்டி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்த பல்கலைக்கழகம் இந்து உயர் கல்விக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி செயல்படும். இதன் மூலம் ஐ.எச்.டி.என் நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் உடனடியாக யூ.எச்.என் மாணவர்களாக மாற்றப்படுவார்கள். ஐ.எச்.டி.என் நிறுவனத்தின் சொத்துக்கள் ஊழியர்கள் உட்பட அனைத்தும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று அதிபரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE:Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News