மனித குலத்தின், மருத்துவ உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் யார் தெரியுமா? சுஸ்ருத் – ரிஷி விஸ்வாமித்ரரின் மகன் - கொலம்பியா பல்கலைக்கழகம் ஆய்வு
மனித குலத்தின், மருத்துவ உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் யார் தெரியுமா? சுஸ்ருத் – ரிஷி விஸ்வாமித்ரரின் மகன் - கொலம்பியா பல்கலைக்கழகம் ஆய்வு
By : Kathir Webdesk
கொலம்பியா பல்கலைகழகத்தின் மருத்துவ அறுவை சிகிச்சை ஆராய்ச்சி துறை இந்திய மருத்துவ அறுவை சிகிச்சை பற்றிய ஆரய்ச்சி கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கொலம்பியா பல்கலைகழக்கத்தின் திர்விங் மருத்துவ மையத்தின் இணையதலாத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில். “தோல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு நவீன மருத்துவ முறையாக கருதப்பட்டு வந்திருக்கிறது, ஆனால் இது 2500 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கத்தில் இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் “ப்ளாஸ்டிக் சர்ஜரி “என்று சொவார்கள்.
இந்தியாவில் வாழ்ந்த சுஷ்ருதா என்ற மருத்துவ அறுவை சிகிச்சை நிபுனர் 6 ஆம் நூற்ராஅன்டின்ல் வாழ்ந்து வ்வந்த்ஆர். ரிஷி விஸ்வாமித்ரரின் மகன் தான் சுஸ்ருத் என மஹாபாரதம் கூறுகிறது.
இவர் விஸ்வாமித்ரரின் மகன் என்பதை தாண்டி யார் இந்த சுஸ்ருத்?
இவர் தான் மனித குலத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் என்கிறது புராணங்கள். மருத்துவத்தை பற்றியும் அறுவைசிகிச்சை பற்றியும் மிக விரிவாக 184 அத்தியாங்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியவர் இவர். இவர் எழுதிய அந்நூலின் பெயர் “சுஸ்ருத் சம்ஹிதா “என அழைக்கப்படுகிறது. அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள குறிப்புகள் அனைத்தும் இன்றைய காலத்துடன் அதிகபட்சம் ஒத்துப்போவதஅக அறிஞர்கள் சொல்கின்றனர். மேலும் இன்று இத்துறையில் நிபுணர்களாகவும் கைத்தேர்ந்தவர்களாக இருப்பவர்களையே வியப்பில் ஆழ்த்துகிறது இவரின் புத்தகம். இவருக்கும் முன்பும் பின்புமாக சில மருத்துவர்கள் இருந்ததற்கான கதைகள் நம்மிடையே உலவினாலும். இவரே வரலாற்றில் அதிகாரப்ப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்.
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் துவங்கி சிகிச்சை அளைக்கப்படும் முறை வரை அனைத்து தரவுகளும் இப்புத்தகத்தில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் இந்த புத்தகத்தினையும் அடிப்படையாக கொண்டே இன்றைய உச்சத்தை அடைந்துள்ளது எனலாம்.
மருத்துவ வரலாற்றில் உயிரற்ற உடல்களை, உறுப்புகள் குறித்து கற்றுகொள்வதற்காக பயன்படுத்தலாம் எனலாம் மருத்துவ மாணவர்களுக்கு பரிந்துரைத்த முதல் நிபுணரும் இவரே. மேலும் புடலங்காய், வெள்ளரிக்காய் போன்றவைகளை கொண்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்றார் போன்ற மருத்துவ அறுவைகளை பழகலாம் என்று பரிந்துரைத்தவரும் அவரே. மேலும் நீருள்ள உறுப்புகளை மருத்துவ ரீதியில் அறுவை செய்வதற்காக உயிரற்ற விலங்குகளின் நீர் உறுப்புகளையும் லெதர் பைகளில் நீர் நிறப்பியும் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரையையும் வழங்கியுள்ளார்.
சுஸ்ருத் சம்ஹிதா புத்தகம் மனித எலும்பினுள் உள்ள 300 வகையான எலும்புகளை பற்றி பேசுகிறது. நாசியை மாற்றியமத்தல், ஹெரினியா எலும்பு முறிவு மேலாண்மை, பற்களை நீக்குதல், போன்ற அனைத்து வகையான சிகிச்சைகளையும் சுஸ்ருத் இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். ஒரு வேளை மூக்கினில் ஏதேனும் எதிர்பாரா விபத்து நேர்ந்து வெட்டுப்பட்டால் அதனை சீர் செய்ய கன்னத்திலிருக்கும் தோளினை பயன்படுத்தலாம் என்ற பரிந்துரையை முதன் முதலில் வழங்கியவரும் இவரே.
இவரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்கும் முறை, மற்றும் சிறுநீரக கற்களை நிக்குதல் ஆகியவற்றை எந்த சிரத்தையுமின்றி மிக இலகுவாக கையாள முடிந்திருக்கிறது.
இந்த புத்தகத்தில் சுஸ்ருத், 1120 வகையான உடல் உபாதைகள் குறித்து பேசுகிறார். இந்த புத்தகத்தில் 700 மேற்பட்ட மூலிகளை பற்றி பேசப்பட்டுள்ளன. விலங்குகளின் மூலம் கிடைக்கும் வளங்களை கொண்டு உருவாக்கக்கூடிய 57 வகையான மருத்துவ தயாரிப்பு குறிப்புகளை இதில் பதிவு செய்துள்ளார். 12 வகையான எலும்பு முறிவுகள், ஏராளமான அறுவை சிகிச்சை குறிப்புகள். கண் நோய்கள் குறித்தும், கண் அறுவை சிகிச்சை குறித்தும் மிக விரிவாக எழுதியுள்ளார்.
இன்று நாம் உடலை சீராக வைத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும் டயட் முறைகள் அனைத்தையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் சுஸ்ருத். பசுவை புனிதமிகுந்ததாகவும் இந்து கடவுள்களின் மகத்துவத்தையும் வேதங்களையும் சேர்த்தே பேசுகிறது இவரின் புத்தகம்.
இன்றைக்கு மேற்கத்திய கலாச்சாரத்தை போற்றும் இந்தியர்களுக்கு இவற்றை ஏற்றுகொள்வதென்பது அவ்வளவு கடினமாக உள்ளது. இதை காவியமாக்களின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள்.
ஆனால் இந்திய வேதங்கள் புராணங்களில் எத்தனை அறிவியல் மற்றும் விஞ்ஞானபூர்வமான உன்மைகள் அடங்கியுள்ளன என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர். ஆனால் மேற்கத்திய பல்கலைகழகங்கள் பலவும், ஏன் ஒரு சில குறிப்பிட்ட பல்கலைகழகங்கள் நாசாவோடு சேர்ந்து இந்திய வேத புராண அறிவியலை ஆராய்ச்சி செய்கின்றன என்பதை இவர்களால் ஒப்புக்கொள்ளவே முடியாது!! ஆனால் மகத்துவம் என்பது என்னாலும் மாறாது!!
நன்றி: https://www.myindiamyglory.com/2017/02/19/sushrut-worlds-first-surgeon-described-1120-types-of-diseases-and-cure/