மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் முதல் மந்திரி சிவராஜ் சிங் தொடங்கி வைத்தார்
மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார்.
By : Karthiga
பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் முதல் மந்திரி சிவராஜ் சிங்சவுகான் , பெண்களுக்கு மாதம் 1000 வழங்கும் 'முக்கிய மந்திரி லட்லி பெஹனா யோஜனா' என்ற திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இதன்படி வருமான வரி செலுத்தாதவர்கள் மற்றும் ரூபாய் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும். இதற்கு இம்மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 30 - ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மே 31ஆம் தேதி பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 10ஆம் தேதியிலிருந்து அவர்களுக்கு மாதம் தோறும் வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்படும். இத்திட்டத்துக்கான பட்ஜெட்டில் ரூபாய் 8000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.