Kathir News
Begin typing your search above and press return to search.

ஐந்தரை வயது இந்திய சிறுமியின் பிரமிப்பூட்டும் சாதனை!

சிறுமி பிரிஷா லோகேஷ் நிகாஜுவுக்கு சக சிறுமிகளுடன் ஓடியாடி விளையாடும் வயது தான். ஆனால் இந்த ஐந்தரை வயது சிறுமி உலகின் உயரமான சிகரமான எவரெஸ்டின் அடிவார முகாமை அடைந்திருக்கிறார். மிக இளம் வயதில் சாதனை புரிந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்

ஐந்தரை வயது இந்திய சிறுமியின் பிரமிப்பூட்டும் சாதனை!
X

KarthigaBy : Karthiga

  |  21 Jun 2023 4:15 PM IST

எவரெஸ்டின் அடிவார முகாம் தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது கடல் மட்டத்திலிருந்து 17,598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு ஏக சிரமப்படுவார்கள். ஆனால் ஐந்தரை வயதே ஆகும் பிரிஷா இந்த உயரத்தை தொட்டு பிரமிப்பூட்டி இருக்கிறார்.

பிரிஷாவின் பூர்வீகம் மத்திய பிரதேச மாநிலம் வேலூர் மாவட்டம் என்றாலும் மராட்டிய மாநிலம் தானேயில் தனது பெற்றோர் இரண்டு சகோதரிகளுடன் வசிக்கிறார். மும்பையில் ஐ.டி இன்ஜினியராக பணிபுரியும் லோகேஷ் ஒரு மலையேற்ற வீரரும் கூட. அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கு மலையேத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது. இதை எடுத்து அவருக்கு மலையேற்றத்துக்கு முறையான பயிற்சியை தந்தை லோகேஷ்-ம் தாய் சீமாவும் வழங்கி இருக்கிறார்கள்.

அதன் விளைவாக பிரிஷா தனது இரண்டரை வயதிலேயே மலையேறத் தொடங்கி விட்டார். தனது மூன்று வயதில் மராட்டியத்திலேயே உயரமான சிகரமான கால்சுபாயைத் தொட்டுவிட்டார். அந்த வயதில் எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார். தினமும் ஐந்து ஆறு மைல் தூரம் நடப்பது ஏரோபிக்ஸ் பயிற்சி தனது அடுக்குமாடி குடியிருப்பு படிகள், பூங்கா சுவரில் ஏறுவது என்று தயாரானார்.

கடந்த மே 24ஆம் தேதி நேபாளத்தின் லுக்லாவில் இருந்து தனது தந்தையுடன் மலை ஏற்றத்தை தொடங்கிய பிரிஷா இம்மாதம் ஒன்னாம் தேதி எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தார். அங்கு இந்திய தேசிய கொடியுடன் பெருமிதத்தோடு போஸ் கொடுத்தார். இவ்வளவு உயரமான இடத்தை ஏற்றுவதற்கு பெரியவர்கள் ஆன மலை ஏற்ற வீரர்களை மிகவும் சிரமப்படுவார்கள். பலருக்கு மூச்சு திணறல் , தலைவலி, மலையேற்ற காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் பிரிஷா கஷ்டங்களை எல்லாம் எளிதாக கடந்து இந்த சாதனையை படைத்துவிட்டால் என்று பூரிப்பாய் சொல்கிறார் தந்தை லோகேஷ்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News