Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு - டிரோன்கள் பறக்க இரண்டு நாள் தடை!

நரேந்திர மோடி சென்னை வருவதை ஒட்டி 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு - டிரோன்கள் பறக்க இரண்டு நாள் தடை!
X

KarthigaBy : Karthiga

  |  19 Jan 2024 11:00 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராதாக்கூர் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் இருந்து இன்று மாலை தனி விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ் அடையார் கடற்படை தளத்துக்கு வருகிறார்கள்.


பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகிறார். வழிநெடுக பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை ஒட்டி சென்னையில் 2000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம் பிரதமர் தங்கும் கவர்னர் மாளிகை, அவர் சாலை மார்க்கமாக செல்லும் பகுதிகள் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி போன்றவற்றில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .


போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா,அஸ்ரா கார்க் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள் நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் சந்தேகமாக யாரேனும் தங்கி உள்ளார்களா என்பதை கண்டறிய போலீசார் தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேரு விளையாட்டரங்கம் அமைந்துள்ள பெரிய மேடு பகுதிகளில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது.


விளையாட்டு அரங்கத்தில் போலீசார் அவ்வப்போது மோப்பநாய் மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள். பிரதமரின் வருகையை ஒட்டி குற்றவியல் நடைமுறை சட்டம் 144 சென்னையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News