Kathir News
Begin typing your search above and press return to search.

சீக்கிய பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கின் உறவினர் உட்பட ஐந்து பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது - பஞ்சாப் போலீஸ் நடவடிக்கை

சிகே பிரிவினைவாத தலைவர் அம்ரிக்பால் சிங்கின் உறவினர் உட்பட ஐந்து பேர் மீது பஞ்சாப் போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்

சீக்கிய பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கின் உறவினர் உட்பட ஐந்து பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது - பஞ்சாப் போலீஸ் நடவடிக்கை

KarthigaBy : Karthiga

  |  21 March 2023 7:00 AM GMT

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு அமைக்க கோரிய 1980 களில் பிந்தரன்வாலே என்ற பிரிவினைவாத தலைவர் ஆயுத போராட்டம் நடத்தினார். 1984 ஆம் ஆண்டு அவர் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். அத்துடன் அடங்கியிருந்த பிரிவினைவாத உணர்வுகள் அம்ரித்பால் சிங் என்ற மத போதகரின் செயல்பாடுகளால் மீண்டும் முளைவிட தொடங்கியுள்ளன. அவர் தன்னை இன்னொரு பிந்தரன்வாலேவாக கருதி பிரிவினைவாத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் .


கடந்த மாதம் போலீஸ் நிலையத்தில் புகுந்து தனது ஆதரவாளரை விடுவித்தார். இந்த நிலையில் அம்ரித் பால்சிங் மற்றும் அவரது 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்புக்கு எதிராக பஞ்சாப் போலீசார் கடந்த சனிக்கிழமை அதிரடி நடவடிக்கை தொடங்கினார் .ஜலந்தரில் போலீசரின் முற்றுகையிலிருந்து அம்ரித் பால்சிங் தப்பினார். இருப்பினும் அவருக்கு எதிரான வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.


அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர்கள் தல்ஜித்சிங் கல்சி , பகவந்த் சிங், குர்மீத்சிங், பிரதான் மந்திரி பஜேகே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம் அசாம் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . அம்ரித்பால்சிங்கின் உறவினர் ஹர்ஜித் சிங் கடந்த சனிக்கிழமை இரவு போலீசாரிடம் சரணடைந்தார். இந்த நிலையில் திப்ருகர் சிறையில் உள்ள நாலு பேரு மீதும் ஹர்ஜித் சிங் மீதும் நேற்று பஞ்சாப் போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்தனர் இது கடுமையான சட்டமாகும் ஹர்ஜித் சிங்கும் கொண்டு செல்லப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.


பஞ்சாப் போலீஸ் ஐ.ஜி சுக்செயின்சிங் கில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அம்ரித் பால் சிங் விவகாரத்தில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்ரித் பால் சிங் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார். அவரை பிடிக்கத் தொடர்ந்து முயன்று வருகிறோம்.அம்ரித்பால்சிங் இயக்கத்துக்கு பாகிஸ்தான் உளவுப் படையான ஐ. எஸ். ஐ உடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதாகவும் கருதுகிறோம். மாநிலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறார்கள். அமைதி குழு கூட்டங்கள் நடந்து வருகின்றன. மாநிலத்தின் முழுமையான அமைதி நிலவுகிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பொய் செய்தி பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News