இணையத்தில் ட்ரெண்டாகும் எப்.எம்'கள் - ஒரு பார்வை #fm #twitterfm
இணையத்தில் ட்ரெண்டாகும் எப்.எம்'கள் - ஒரு பார்வை #fm #twitterfm

என்னதான் புதுசு புதுசா இணையத்தில் வந்தாலும் பாட்டு கேட்பதற்கு'ன்னு ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்யுது, அதுலையும் எப்.எம் எனப்படும் பண்பலை'ன்னா அது ஒரு சுவாரஸ்யம்தான் பிடிச்ச பாட்டு கேட்கிறது, நமக்கு விருப்பமான பேச்சாளர், பிரபலம் பேசி கேட்கிறது'ன்னு அது ஒரு வகையான ரசனைதான். நம்ம அன்றாட வேலைகளை செஞ்சுகிட்டே கேட்கிறது, ஓய்வு நேரத்துல கேட்கிறது, பயணத்தின் போது கேட்கிறது, இரவு தூங்க போறப்ப கேட்கிறது'ன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா எப்.எம் அவங்க மன அழுத்தத்த குறைக்குதுன்னு சொல்லலாம். அந்த வகைல இப்ப கொரோனோ ஊரடங்கு சமயத்துல ட்விட்டர்'ல சில எப்.எம் மற்றும் அதுசார்ந்த பரவலான ட்விட், விவாதங்கள், ஏன் சண்டைகள் கூட நடந்துட்டு இருக்கு. என்னடா'ன்னு எட்டி பார்த்தா அதுல ஒரு குட்டி உலகமே இயங்கிட்டு இருக்கு.
இது சம்மந்தமா மாஃபியா எப்.எம் டீமோட தொடக்கம் காரணமான அரவிந்த் கூட பேசியதில் இருந்து அவர் பகிர்ந்துகிட்டது. "ப்ரோ இது சும்மா விளையாட்டா ஆரமிச்சது, அதுவும் கொரோனோ ஊரடங்கப்ப எல்லாரும் நண்பர்களா 3 பேர் பேசிட்டு இருந்தப்ப ஏதாவது பண்ணுங்களேன்டா'ன்னு ஒரு நண்பர் சொல்ல நா ஒரு எப்.எம் கிரியேட் பண்ணி வச்சுருந்தேன், "இந்த ஐடியா நல்லாருக்கு'ன்னு இதையே ஆரமிக்கலாம்'ன்னு சொன்னதும் அடுத்த நாள் சச்சின் பர்த்டே வந்துச்சு அதனால இதை வச்சு ஷோ பண்ணலாம்'ன்னு ஆரமிச்சோம். பிறகு "ஏன் ட்விட்டர்'ல இருக்குற நண்பர்களை பேச வைக்க கூடாது'ன்னு யோசனை வந்தப்ப இது நல்ல ஐடியா'வா இருக்கே'ன்னு ஒவ்வொரு நண்பர்கள்கிட்ட கேட்க ஆரமிச்சோம். நாங்க கேட்ட எல்லாருமே ஆச்சர்யபட்டதுடன், பேசவும் ஒத்துகிட்டாங்க! அப்படியே ஷோ போக ஆரமிச்சது அது ட்விட்டர்'ல ஆக்டிவா இருக்குற நண்பர்பள், சினிமா, அரசியல் பிரபலங்கள்'ன்னு இப்ப ஷோ பன்ற அளவுக்கு வந்து நிக்குது ப்ரோ"என்றார்.
மேலும், "இதுல எத்தனை பேர் இருக்கீங்க?, "இதுல நான் அப்புறமா என் நண்பர்கள் ரியாஸ், மணி, பாலா மற்றும் Dr.பாலா'ன்னு எல்லாமே என் நண்பர்கள்'தான் இருக்கோம்".
"இதோட அடுத்தகட்டம் என்ன?" - "இது இல்லாம நாங்க வெப் சீரிஸ்'க்கா YouTube சேனல் ஆரமிச்சு ரிவீவ் பண்ணலாம்'ன்னு இருக்கோம்" என்கிறார்.
"சரி கடைசியா கேட்கிறேன், அது என்ன திமுக'வை பற்றி பேசுபவர்கள் மட்டுமே இதுல வர்றாங்க? உதாரணமாக MP செந்தில்குமார், ஊடகவியாலர் பனிமலர், எழுத்தாளர் SKP கருணா இது போன்றவர்கள் மட்டுமே வர்றாங்க? ஏன் இது திமுக அபிமான எப்.எம்'மான்னு கேட்டதுக்கு?
சற்றே அதிர்ந்தார், "ஐயோ சத்தியமா கிடையாது ப்ரோ! நாங்க ட்விட்டர்'ல ஆக்டிவா இருக்குறவங்கள வச்சு ஷோ பண்றோம், மேலும் சில பிரபலங்கள வச்சு பண்றோம் அவ்ளோதான். மத்தபடி கட்சி சார்பா எதையும் பண்ணல, நாங்க கேட்டதுக்கு இவங்க எல்லாம் வந்தாங்க அதான் பண்ணிணோம். இன்னும் சிலர பேச வைக்க முயற்ச்சி பண்றோம். யாரு நல்ல கண்ட்டண்ட் தர்றாங்களோ அவங்க பேசலாம், அப்புறம் இவங்கதான் பேசனும், அவங்கதான் பேசனும்'ன்னு வித்தியாசம்'லாம் கிடையாது" என்று முடித்துக்கொண்டார்.