Kathir News
Begin typing your search above and press return to search.

உணவு பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: விலை குறைய மத்திய அரசு துரித நடவடிக்கை

காய்கறிகளைத் தொடர்ந்து பருப்பு விலையும் உயர்ந்திருப்பதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் மத்திய அரசு அதற்கான துரித நடவடிக்கையை எடுத்து வருகிறது.

உணவு பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானதுதான்:  விலை குறைய மத்திய அரசு துரித நடவடிக்கை

KarthigaBy : Karthiga

  |  23 Aug 2023 4:30 PM GMT

கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 7.44 சதவீதமாக இருந்தது. கடந்த 15 மாதங்களில் இதுதான் மிகவும் அதிகம். குறிப்பிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வு தான் பணவீக்கம் அதிகரிக்க காரணமாகும். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது :-


தானியங்கள், பருப்பு வகைகள் காய்கறிகள் ஆகியவற்றின் விலை கடந்த ஜூலை மாதத்தில் இரட்டை இலக்க உயர்வை சந்தித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு பணவீக்கத்தை அதிகரித்தது. கர்நாடக மாநிலம் கோலாரில் தக்காளியில் ஏற்பட்ட வெள்ளை பூச்சி தாக்குதலால் தக்காளியின் உள்நாட்டு வரத்து பாதிக்கப்பட்டது. வடமாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது.


இதனால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்தது, 'காரிப்' பருவத்தில் உற்பத்தி குறைந்ததால் துவரம் பருப்பின் விலையும் கடுமையாக உயர்ந்தது. தக்காளி , பச்சை மிளகாய் , இஞ்சி, பூண்டு அடியவற்றின் விலை 50% உயர்ந்தது. இதுவே பணவீக்க உயர்வுக்கு காரணம். அதே சமயத்தில் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


புதிய தக்காளி வரத்து இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வரத் தொடங்கும்.அதன் பிறகு தக்காளி விலை குறையும். எனவே உணவு பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது தான் . இருப்பினும் உலக அளவில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாலும் உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் வருகிற மாதங்களில் பணம் வீக்கம் அதிகரிக்கலாம். எனவே மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News