Kathir News
Begin typing your search above and press return to search.

கடற்படை கப்பலில் முதல் முறையாக பெண் உயர் அதிகாரி!

கடற்படை கப்பலில் முதல் முறையாக பெண் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக கடற்படை தளபதி தெரிவித்தார்!

கடற்படை கப்பலில் முதல் முறையாக பெண் உயர் அதிகாரி!

KarthigaBy : Karthiga

  |  3 Dec 2023 7:15 AM GMT

இந்திய கடற்படை தினம் நான்காம் தேதி கொண்டாடப்படுகிறது. இடையொட்டி கடற்படை தளபதி ஆர்.ஹரிக்குமார் நேற்று இருபர்களுக்கு பேட்டி வைத்தார். அவர் கூறியதாவது :-

கடற்படை கப்பலின் முதல்முறையாக பெண் கமாண்டிங் அதிகாரியை கடற்படை நியமித்துள்ளது. அதுபோல' அக்னிபாத்' திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது.இவை எல்லாம் ராணுவத்தில் அனைத்து அந்தஸ்திலும் அனைத்து பணிகளையும் பெண்களுக்கு ஒதுக்கும் எங்கள் கொள்கைக்கு உதாரணம்.

கடந்த ஓராண்டு காலத்தில் நமது கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் விமானங்கள் ஆகியவை முக்கிய கடல் பகுதிகளில் தீவிர செயல்பாட்டில் இருந்தன. தேச நலனை பாதுகாக்க இந்திய பெருங்கடல் மற்றும் அதை தாண்டிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தோ பசிபிக் கடல் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்திய கடற்படையை பொறுத்தவரை எப்போதும் போருக்கு தயார் நிலையிலும் நம்பகமான முறையில் ஒருங்கிணைந்த முறையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடமாட்டம் இருப்பது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அப்பகுதியில் அனைத்து நடமாட்டத்தையும் இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது. என்று கடற்படை தளபதி ஹரிகுமார் பதிலளித்தார்.

SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News