Kathir News
Begin typing your search above and press return to search.

நீலகிரியில் முதல் முறையாக இருளர் இன மாணவி மருத்துவ படிப்புக்கு தேர்வு - தமிழகத்தில் சுக்குநூறாகும் நீட் எதிர்ப்பு பிரச்சாரம்

நீலகிரியில் முதல் முறையாக இருளர் இன மாணவி மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு நெல்லை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது

நீலகிரியில் முதல் முறையாக இருளர் இன மாணவி மருத்துவ படிப்புக்கு தேர்வு - தமிழகத்தில் சுக்குநூறாகும் நீட் எதிர்ப்பு பிரச்சாரம்

KarthigaBy : Karthiga

  |  8 Nov 2022 7:00 AM GMT

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சூலூர் மாவட்டம் அடுத்த தும்பிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலன். விவசாயி. இவரது மனைவி ராதா. அவர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ஸ்ரீமதி இவர்கள் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீமதி கடந்த 2019 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று 406 மதிப்பெண்கள் பெற்றார். இதைத்தொடர்ந்து டாக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் டாக்டருக்கு படிக்க முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து யூடியூப் வீடியோக்களை பார்த்து தானாகவே படித்து நீட் தேர்வு எழுதினார். ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதை அடுத்து ஸ்ரீமதி கோவையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார்.


அதன்பின்னர் நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.சமீபத்தில் நடந்த மருத்துவமாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொண்டார். இதில் மாணவி ஸ்ரீமதிக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்தது. இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை ஸ்ரீமதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து மாணவி ஸ்ரீமதி கூறியதாவது:-

நான் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் நான்கு முறை நீட் தேர்வு எழுதினேன். அப்போது இரண்டு முறை தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் அங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் என்னால் சேர முடியவில்லை. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் வேறு எந்த உயிர்கல்வியிலும் சேராமல் மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன். தற்போது நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். தற்போது மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. டாக்டர் ஆகி பொதுமக்களுக்கு சேவை செய்ய உள்ளேன். குழந்தைகள் நல டாக்டராக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் அவர் கூறினார்.நீலகிரி மாவட்டத்தில் ஒரு இருளர் இன மாணவி ஒருவர் முதல் முறையாக எம்.பி.பி.எஸ் படிக்க தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News