தனியாக சமூக வலைதளத்தை தொடங்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளார். தன்னுடைய டிரம்ப் மீடியா டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் ‘ட்ரூத் சோஷியல்’ என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று தொடங்கியுள்ளார். அவரது சமூக வலைதளத்திற்கு ‘ட்ரூத் சோஷியல்’ என்று பெயரிட்டுள்ளார்.
By : Thangavelu
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளார். தன்னுடைய டிரம்ப் மீடியா டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் 'ட்ரூத் சோஷியல்' என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று தொடங்கியுள்ளார். அவரது சமூக வலைதளத்திற்கு 'ட்ரூத் சோஷியல்' என்று பெயரிட்டுள்ளார்.
இந்த சோஷியல் மீடியா அமெரிக்க முழுவதும் முதல் காலாண்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ஆப்பில் ஸ்டோரில் ட்ரூத் சோஷியல் ஆப் வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படுகிறது.
இதற்கு முன்னர் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருக்கும் போது ட்விட்டரில் சர்ச்சையான வகையில் கருத்து பதிவிட்டதற்காக அவரது கணக்கை அந்நிறுவனம் முடக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப் தனக்கென்று தனியாக சமூக வலைதளத்தை உருவாக்குவேன் என்று சூளுறைத்தார். அதன்படி அவர் தற்போது ஆப் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi