Kathir News
Begin typing your search above and press return to search.

திருவாரூரில் அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நான்கு பேர் கைது

திருவாரூரில் அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூரில் அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நான்கு பேர் கைது
X

KarthigaBy : Karthiga

  |  27 Sep 2022 2:00 PM GMT

திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மூன்று அரசு பஸ்களில் கண்ணாடிகள் அடுத்தடுத்து மர்மநபர்களால் உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தை திருவாரூர் மாவட்ட போலீஸ் ரெண்டு சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார்.


இது குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் .இந்த நிலையில் பஸ்களின் கண்ணாடி உடைப்பு தொடர்பாக திருவாரூர் கொடிக்கால் பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது, திருவாரூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஹாஜா நிவாஸ் ,கொடிக்கால் பாளையத்தைச் சேர்ந்த முகமது மகசூன் மஹதீர் மற்றும் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த அஹமதுல்லா ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 23ஆம் தேதி தேசிய திறனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் .


இதன் எதிரொலியாக திருவாரூரில் அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News