விமான விபத்தில் சிக்கிய நான்கு குழந்தைகள் 40 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்பு
உலகில் ஒரு குழந்தை வந்து பிறக்கிற போது அது இறக்கிற தேதியையும் இறைவன் நிர்ணயித்து விடுகிறான். அவன் நிர்ணயத்த தேதி வரவில்லை என்றால் விபத்து கூட மரணத்தை ஏற்படுத்தி விட முடியாது . இதை உறுதிப்படுத்துவது போல் ஒரு சம்பவம் தென்ன அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரங்கேறி இருக்கிறது.
By : Karthiga
கடந்த மே மாதம் 1-ஆம் தேதியன்று ஒரு தாய் தனது நான்கு குழந்தைகளுடன் செஸ்னா - 26 இலகுவர விமானத்தில் அரராகு வாரா நகரில் இருந்து அங்குள்ள மற்றொரு நகரான சான்ஜோஸ் நகருக்கு பயணமானார். நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு ஆபத்தில் இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் வந்தது . ஆனால் இந்த விமானத்தை பற்றி அதன்பிறகு தகவல் இல்லை .
15 நாட்களுக்கு மேலாக நடந்த தேடுதல் வேட்டைக்கு பின்னர் அந்த விமானம் அங்குள்ள அமேசான் காட்டில் விபத்தில் சிக்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் தாயும் விமானியும் துணை விமானியும் பலியாகி ஊருக்குள் இருந்து கிடந்தனர். ஆனால் அந்த விமானத்தில் பயணித்த பிறந்து 11 மாதமே ஆன ஒரு குழந்தை மற்றும் நான்கு ,9, 13 வயதான மூன்று குழந்தைகள் என நான்கு பேர் மாயமாகி இருந்தார்கள்.அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் காட்டுக்குள் தான் அலைந்து திரிந்து கொண்டிருப்பார்கள் என்று யூகம் எழுந்தது.
இந்த குழந்தைகளை தேடும் பணியை கொலம்பியா அரசு முடிக்கிவிட்டது. விபத்தில் தாயும் விமானங்களும் பலியான நிலையில் இந்த குழந்தைகளின் கதி என்னவாக இருக்கும் என்பது அந்த நாட்டின் பேசுபொருளாக மாறிப்போனது. குழந்தைகளை தேடும் பிரம்மாண்ட பணியில் ராணுவ வீரர்களுடன் பழங்குடி சமூகத்தினரும் இணைத்தனர். குழந்தைகளின் பாட்டி அவர்கள் காட்டுக்குள் எங்கிருந்தாலும் தொடர்ந்து அலைந்து திரியாமல் அதே இடத்தில் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து அதை ஒலிப்பதிவு செய்து ஹெலிகாப்டர்களில் சென்று மீட்பு படையினர் ஒளிபரப்பனர்.
காணாமல் போன குழந்தைகள் பழங்குடியின குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு காட்டுக்குள் என்னென்ன பழங்கள் கிடைக்கும், அவற்றை சாப்பிட்டுக்கொண்டு கொடிய விலங்குகளுக்கு மத்தியிலும் காட்டுகள் எப்படி உயிர் வாழலாம் என்ற கலையெல்லாம் எல்லாம் தெரியும் என்பதால் அவர்கள் கண்டிப்பாக உயிரோடு தான் இருப்பார்கள் என்று பழங்குடியின மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர் . எனவே மீட்பு படையினர் நம்பிக்கையுடன் தேடினர்.
குழந்தைகளின் பாதச்சுவடுகளையும் அவர்கள் வழியிலேயே விட்டுச் சென்ற பாட்டில், கத்தரிக்கோல், தலை முடிச்சாயம் , தற்காலிக கூடாரம் ஆகியவற்றை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து அந்த வழியை மீட்புபடையினர் தங்கள் தேடுதல் வேட்டையில் தொடர்ந்தனர். இந்த நிலையில் விபத்தை சந்தித்து 40 நாட்கள் ஆன நிலையில் ஒரு வழியாக காணாமல் போன குழந்தைகளை மீட்பு படையினர் நேற்று கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர்.
காட்டுக்குள் அற்புதமாக இது பார்க்கப்படுகிறது. அந்த குழந்தைகள் அமேசான் காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் பக்கோடாவுக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காட்டுக்குள் அலைந்து திரிந்தாலும் சோர்வாக காணப்பட்டதாலும் நீர்ச்சத்தில் இல்லாமல் போனதாலும் அவர்களுக்கு புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது.