Kathir News
Begin typing your search above and press return to search.

சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்துக்கு நான்கு மிதக்கும் கப்பல் தளங்கள்- மத்திய அரசு அனுமதி

சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்தில் நான்கு மிதக்கும் கப்பல் தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்துக்கு நான்கு மிதக்கும் கப்பல் தளங்கள்- மத்திய அரசு அனுமதி

KarthigaBy : Karthiga

  |  10 March 2023 9:00 AM GMT

மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் நாட்டின் சமூக பொருளாதார சூழ்நிலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடல் சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தளங்களை அமைப்பதற்கு பதிலாக தனித்துவமான மிதக்கும் தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் .


இந்த மிதக்கும் இறங்குதளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ஆகவும், நவீனத்துவம் மிக்கதாகவும், நீண்ட காலம் உழைக்கக்கூடியதாகவும் உள்ளன. இதுவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறக்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தலங்கள் குருபுரா, நேத்ராவதி ஆறுகளில் அமைக்கப்பட்டு சுற்றுலா நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும்.


இதே போல தமிழ்நாட்டில் நான்கு மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் , வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் இரண்டு தளங்கள் அமைக்கப்பட உள்ளன . மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலா பயணிகளைஈர்க்ககூடிய இடங்களிலும் இந்த இங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன.


மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மிதவை இறங்கு தளங்கள் சுற்றுலா பயணிகள் தடை இன்றி பாதுகாப்பாக போக்குவரத்து மேற்கொள்ளவும், கடலோர சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டும் அமைக்கப்பட இருக்கிறது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News