செப்டம்பர் 14- ஆம் தேதி வரை இலவச அப்டேட் தான் : மக்களே! ஆதாரை அப்டேட் செய்யுங்கள்
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிப்பது அவசியம்.
By : Karthiga
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் இமெயில் ஆகியவற்றை உள்ளிட்ட விபரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கிறது.
ஏனென்றால், 10 ஆண்டுகளில் திருமணம் நடந்திருக்கும் பெண்கள் அவர்களது கணவர் பெயரை தந்தை பெயருக்கு பதிலாக இணைக்காமல் இருப்பார்கள். அதேபோல வேறு பகுதிக்கு வீடு மாறிச் சென்றவர்கள் முகவரியை மாற்றாமல் இருப்பார்கள். மேலும், ஆதார் கார்ட்டில் கொடுத்த மொபைல் நம்பர், இமெயில் போன்ற விவரங்களும் மாறியிருக்கலாம். இதை சரி செய்யவே ஆதார் விவரங்களை புதுப்பிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆன்லைனில் ஆதார் விவரங்களை புதுப்பித்தால், ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படாது என்று தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இலவச அப்டேட் கெடு வரும் செப்டம்பர் 14ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நேரத்தில் ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
இப்போது, நீங்கள் மாற்ற வேண்டிய பெயர், முகவரி போன்ற விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இப்படி அப்டேட் செய்த பின்பு உங்களின் மொபைல் நம்பருக்கும், இமெயிலுக்கும் அப்டேட் ரிக்கொஸ்ட் நம்பர் அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து நீங்கள் அப்ளிகேஷனை டிராக் செய்து கொள்ள முடியும். இந்த அப்டேட் 15 வேலை நாட்களுக்குள் உங்களது ஆதார் கார்ட்டில் புதுப்பிக்கப்பட்டுவிடும்.
அதன் பின்பு, நீங்கள் மீண்டும் UIDAI வெப்சைட்டுக்கு சென்று ஆதார் அட்டையை ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதுபோன்ற அப்டேட்டுக்கு முன்னதாக ரூ.50 பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது, செப்டம்பர் 14ஆம் தேதி வரையில், இலவசமாக இந்த சேவை வழங்கப்படுகிறது.
SOURCE :news18.com