Kathir News
Begin typing your search above and press return to search.

சின்ன குழந்தைகள் என்றும் பாராமல் பாலியல் சீண்டல்! பாவத்தை கழுவ தவத்தில் ஈடுபடும் பாதிரியார்கள்!

French Bishops Kneel In Penance For Decades Of Child Sex Abuse By Church

சின்ன குழந்தைகள் என்றும் பாராமல் பாலியல் சீண்டல்! பாவத்தை கழுவ தவத்தில் ஈடுபடும் பாதிரியார்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  8 Nov 2021 3:15 AM GMT

பிரான்ஸ் நாட்டின் லர்டஸ் பகுதியில் உள்ள French Catholic தேவாலயத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Catholic தேவாலயங்களில் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை குறைந்தபட்சம் 2 லட்சத்து 16 ஆயிரம் சிறுவர்கள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இனி இந்த தேவாலயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதிரியார்கள் சிறப்பு ஜெபத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தேவாலயத்தில் சிறார் பாலியல் அத்துமீறலால் உண்டான பாவத்தை போக்க பிரஞ்சு தேவாலய பாதிரியார்கள் தவம் மேற்கொண்டுள்ளனர்.

உலகம் முழுக்க பல்வேறு காலகட்டங்களில் தேவாலயங்களில் பாலியல் அத்துமீறல்கள், சிறார் பாலியல் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பிஷப்புகள் உள்ளிட்டவர்கள் இதுபோன்ற செயல்கள் காரணமாக மக்களிடையே ஒருவித அதிருப்தி நிலவி வருகிறது.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் லார்ட்ஸ் நகரில் உள்ள பழமையான பிரெஞ்சு கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த பல ஆண்டுகளாக அங்கு ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் பாதிரியார்களால் சிறார்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

தற்போது இந்த குற்றச்சாட்டை விசாரித்த தேவாலய பிஷப்புகள், பாலியல் துன்புறுத்தலால் மரணமடைந்தவர்களின் உறவினர்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக கத்தோலிக்க பாதிரியார்கள் இந்த பாவத்தை கழுவ தவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முழுக்க உள்ள கிறிஸ்தவர்கள் பலர் லார்டஸ் கத்தோலிக்க தேவாலயத்துக்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். இங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நினைவாக சமீபத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த இடம் மரணமடைந்த குழந்தைகளின் நினைவு சின்னமாக கருதப்படும் என்று முன்னதாக பிஷப்புகள் அறிவித்தனர்.

இது குறித்துப் பேசிய பிஷப்புகள் லர்டஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் நிர்வாகம் சிறார் பாலியல் வன்முறை சம்பவத்திற்கு முழு பொறுப்பு ஏற்பதாக அறிவித்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News