Kathir News
Begin typing your search above and press return to search.

அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை,தீர்ப்பு முழு விபரம்!

அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை,தீர்ப்பு முழு விபரம்!

அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை,தீர்ப்பு முழு விபரம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Nov 2019 3:23 PM IST


ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுக்கும் விதமாக அமைய கூடாது.வரலாறு, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது இந்த வழக்கு.மதசார்பின்மையே அரசியல் அமைப்பின் அடிப்படை பண்பு.பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
அதே சமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை.


நீதிமன்றம் நடுநிலை காக்கும் நிலையில் உள்ளது.இந்த வழக்கில் நடுநிலை காக்கப்படும்.அமைதியை காக்கும் விதத்தில்,பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் மனுவில் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது.அந்த இடத்தில் முன்பே கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன.


மசூதி இருந்ததற்கு ஆதாரமில்லை :
12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் அங்கு இருந்ததாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.12 -16 ம் நூற்றாண்டிற்குள் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை.ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை. ராமர் நம்பிக்கை விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது.
சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில் முடிவு செய்ய முடியும். ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையில் விவாதத்திற்கு உள்ளாக்க முடியாது. ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது.இந்த வழக்கில் தொல்லியல் துறையின் ஆதாரங்களை புறம் தள்ள முடியாது.



இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை.மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டிடம் அல்ல.சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது.வரலாறு, மதம், சட்டம் என்பதை கடந்து அயோத்தி விவகாரத்தில் உண்மை பயணித்துள்ளது.நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது.இந்து அமைப்பிற்கே சொந்தம் : மசூதி கட்டுவதற்காக கோயில் இடிக்கப்பட்டது என தொல்லியல் துறை கூறவில்லை.மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை சுப்ரீம் கோர்ட் மதிக்கிறது.



சர்ச்சைக்குரிய நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கம் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன,ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே அயோத்தியில் இந்துக்கள் ராமர் - சீதையை வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது,சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டுமொத்தமாக சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது,பாபர் மசூதி இஸ்லாமிய முறையிலானது இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. நிர்மோகி அகார வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல,பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை.



ராமர் கோயில் கட்ட அனுமதி : அலகாபாத் ஐகோர்ட், நிலத்தை 3 ஆக பிரித்துக் கொடுத்தது தவறு.இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோஹி வழக்கு தள்ளுபடி,நிலத்திற்கு உரிமை கோரும் ராம்லல்லாவின் மனு மட்டுமே ஏற்க கூடியது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம்.
இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும்.



அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும்,நிலத்தை பராமரிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும்,நிலத்தை மூன்றாக பிரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவு செல்லாது,சர்ச்சைக்குரிய இடத்தில் 3 மாதங்களில் கோயில் கட்ட மத்திய அரசு டிரஸ்ட் அமைக்க வேண்டும்.



அயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படும்.
அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.!!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News