Kathir News
Begin typing your search above and press return to search.

சதுப்பு நிலங்கள் தொடர்பான ஐகோர்ட் உத்தரவுகளை முழு வீச்சுடன் செயல்படுத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சதுப்பு நில விவகாரம் தொடர்பான ஐகோர்ட் உத்தரவுகளை முழு வீச்சுடன் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு விடுத்துள்ளது.

சதுப்பு நிலங்கள் தொடர்பான ஐகோர்ட் உத்தரவுகளை முழு வீச்சுடன் செயல்படுத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு
X

KarthigaBy : Karthiga

  |  20 Sep 2022 1:30 PM GMT

சென்னை சோழிங்கநல்லூர் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகளில் உள்ள சதுப்புநிலங்களை போக்குவரத்து சுற்றுலாத்துறைகளுக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக எச்.சி.சேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகள், சதுப்பு நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சதுப்பு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கருணையின்றி அப்புறப்படுத்த வேண்டும் ஆக்கிரமிப்புகளில் உள்ள கட்டிடங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மின்சார இணைப்பு ஆகியவற்றை துண்டிக்க வேண்டும். சுற்றுலா துறைகளுக்கு மாற்றம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்ற என்று உத்தரவிட்டது.


இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி எம் .ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் டி.குமணன் மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். எதிர் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.சி ராஜுதின் சென்னை ஹைகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டினார் .அதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் சதுப்புநிலங்களை மீட்கும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் உத்தரவுகளை முழுவீச்சுடன் செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News