ஜி - 20 முக்கிய தீர்மானங்கள் !
ஜி 20 உச்சி மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . அவை பற்றி காண்போம்.
By : Karthiga
அனைத்து வகையான தீவிரவாதத்தையும் தீவிரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பாக புகலிடம் வழங்குபவர்கள் நிதி உதவி செய்பவர்களையும் கடுமையாக கண்டிக்கிறது . மேலும் தீவிரவாதத்தை ஒழிக்க நிதி மற்றும் அரசியல் ரீதியாக சர்வதேச ஒத்துழைப்பின் செயல் திறனை அதிகரிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தவும் அழைப்பு விடுகிறது. அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது.
உக்ரைன் ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உலகளாவிய கட்டமைப்பை அனைத்து நாடுகளும் உடனடியாக செயல்படுத்துவது 2030- க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறையை கவனம் செலுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச விதிகள் வகுக்கவும், பாதுகாப்பான நம்பகமான பொறுப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும் சர்வதேச ஒத்துழைப்பு உக்குவிக்க வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளவர்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான உயர்தர கல்வி மற்றும் திறன் பயிற்சியை உறுதிப்படுத்த வேண்டும். கற்பவர்கள் அனைவரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வசதிகளை பெற வேண்டும். உயர்தர தொழில்நுட்பம் தொழில் கல்வி மற்றும் பயிற்சிக்கான அணுகலை விரிவுபடுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் ஏற்றத்தாழ்வுகளை குறித்த மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும் நன்கு அளவீடு செய்யப்பட்ட பணவியல் நிதி மற்றும் கட்டமைப்பு கொள்கைகளின் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி உலக வெப்பமயமாதல் குறைப்பு இலக்குகளை அடைவதற்கான உலகளாவிய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லைை. இதில் அனைத்து நாடுகளும் தனித்தனியாக தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஊழலை ஜி- 20 அமைப்பு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. ஊழலை ஒழிக்க சட்டரீதியான சர்வதேச ஒத்துழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.
SOURCE :DINAKARAN