Kathir News
Begin typing your search above and press return to search.

பருவநிலை கண்காணிப்புக்கு ஜி- 20 செயற்கைக்கோள்!

உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு உதவும் வகையில் பருவநிலை மாற்றத்தை கண்காணிக்க ஜி- 20 செயற்கைக்கோள் ஏவப்படும் என பிரதமர் மோடி யோசன தெரிவித்துள்ளார்.

பருவநிலை கண்காணிப்புக்கு ஜி- 20 செயற்கைக்கோள்!

KarthigaBy : Karthiga

  |  10 Sep 2023 4:45 AM GMT

ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பேசுகையில், "இந்தியா சமீபத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்ததுள்ளது. இதே போல் உலக அளவில் தெற்கு நாடுகளுக்கு பயன்படும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களை கண்காணிப்பதற்கான ஜி - 20 செயற்கைகோளை இந்தியா ஏவும்.


இதிலிருந்து கிடைக்கும் பருவநிலை மற்றும் வானிலை தொடர்பான தகவல்கள் உலகளாவிய தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். சந்திராயன் 3 விண்கலம் போல் இந்த ஜி- 20 செயற்கைக்கோள் மனித சமுதாயத்திற்கு பயன் அளிப்பதாக இருக்கும் . இந்த முயற்சியில் ஜி- 20 யில் உள்ள அனைத்து நாடுகளும் பங்கு பெற வேண்டும் என்றார்.


SOURCE :DINALKARAN

Next Story
கதிர் தொகுப்பு
Trending News