ஜி-20 உச்சி மாநாடு: மனிதனை மையமாகக் கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு புதிய பாதை
ஜி 20 உச்சி மாநாடு மனிதனை மையமாகக் கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
By : Karthiga
டெல்லியில் ஜி- 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதனை ஒட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி கடை கோடியில் உள்ள அடித்தட்டு மக்கள் சேவை செய்வதற்கான அவரது நோக்கத்தை பின்பற்றுவது முக்கியம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற பொருட்களுக்கு இந்தியா மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது மற்றும் உலக அமைதியை உறுதி செய்வதில் கூட்டாக பணியாற்ற விரும்புகிறது.
இந்தியாவின் ஜி 20 தலைவர் பதவி அனைவரையும் உள்ளடக்கியது .இது மனிதனை மையமாகக் கொண்டு வலுவான நிலையான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியயில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். வளர்ச்சி குறித்த தெற்கு நாடுகளின் கவலைகளுக்கு இந்தியா தீவிரமாக குரல் கொடுத்தது .நமது கலாச்சார நெறிமுறைகளில் வேரூன்றியுள்ள வசுதைவ குடும்பம்" ஒரே பூமி , ஒரே குடும்பம் , ஒரே எதிர்காலம்" உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக பார்க்கும் இந்தியாவின் கண்ணோட்டத்தை ஆழமாக எதிரொலிக்கிறது என்று தெரிவித்தார்.
SOURCE :DINAKARAN