Begin typing your search above and press return to search.
உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த ஜி 20 தலைமை ஒப்பற்ற வாய்ப்பு - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
உலக பொருளாதார வரிசையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த ஜி 20 தலைமை ஒப்பற்ற வாய்ப்பு என்று நிர்மலா சீதாராமன் கூறினார்
By : Karthiga
ஜி 20 நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்த நிலையில் மதிய பட்ஜெட்டில் இது குறித்த நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-
சர்வதேச சவால்களை சமாளிக்கவும் நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டவும் மக்களை மையமாகக் கொண்ட செயல்திட்டத்தை இந்தியா வழி நடத்தி வருகிறது. இந்த சர்வதேச சவால்கள் நிறைந்த தருணத்தில் உலக பொருளாதார வரிசையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த ஜி-20 தலைமை பதவி இந்தியாவுக்கு ஒப்பற்ற வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகமே ஒரு குடும்பம் என்ற கொள்கையுடன் இந்த சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story