G7 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை!

By : Bharathi Latha
கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினார். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.
பிரேசில் அதிபர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, பிரேசில் அதிபர் லுலா ஆகிய இரு அன்பான நண்பர்களுடன் சிறப்பான உரையாடல்களை மேற்கொண்டேன். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். நல்ல மாற்றங்களை உருவாக்குவதை நோக்கி செயல்படுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்"
