Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் - 1 லட்சத்து 25 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு தீவிரம்

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் 1,25,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் - 1 லட்சத்து 25 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு தீவிரம்

KarthigaBy : Karthiga

  |  25 Aug 2022 10:15 AM GMT

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் 125000 அணியாக சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் நா.முருகானந்தம் நிருபர்களிடம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த இருக்கிறோம்.

சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை 5 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.

சென்னையில் செப்டம்பர் 4ஆம் தேதி விசர்ஜன விழா நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் 3 இடங்களில் விநாயகர் சிலைகள் புறப்பாடுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரன் பேட்டை மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் மதியம் 1.31 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் தீவுத்திடலில் முத்துசாமி பாலத்தில் பிற்பகல் 3.31 மணிக்கு ஊர்வலம் தொடங்கும்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இந்துக்களின் பெருமைகளை மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் குழந்தைகள் தினம், அன்னையர் தினம், சமுதாய சமத்துவ தினம் ஆகிய மூன்று தினங்களை கொண்டாடுகிறோம்.


காவல்துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து விழாவை சிறப்பாக கொண்டாட ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.விநாயகர் சிலை பாதுகாப்புக்காக சுமார் 20 லட்சம் பேர் சிலை பாதுகாப்பாளர்களாக சுழற்சி முறையில் செயல்படுவார்கள். விநாயகர் சிலைகள் 3 அடி முதல் 15 அடி உயரம் வரை அந்தந்த பகுதிக்கு ஏற்ற வகையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணை தலைவர் ஜி. கார்த்திகேயன் செயலாளர் மனோகர், செய்தித்தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News