கஞ்சா போதையில் தாயை தலையில் அடித்து கொன்ற மகன் - கஞ்சா போதையால் தடம் மாறும் தமிழகம்
கஞ்சா வாங்க பணம் தராததால் இளைஞன் ஒருவன் தனது தாயை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By : Mohan Raj
கஞ்சா வாங்க பணம் தராததால் இளைஞன் ஒருவன் தனது தாயை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம் அருகே கஞ்சா வாங்க பணம் தராததால் பெற்ற தாயை கட்டாயால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் நடத்தினர். குதிரைக்கார வீதியைச் சேர்ந்த பத்மினி அதே பகுதியில் சங்கு, மணி, துப்பட்டா போன்ற பொருள்களை விற்பனை செய்து வருகிறார். கஞ்சா போதைக்கு அடிமையான அவரது மகன் முரளி வேலைக்கு போகாமல் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கஞ்சா போதையில் இருந்த முரளி மீண்டும் கஞ்சா வாங்க பணம் கேட்டதால் அவரது தாயார் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது தாயாரை கண்முடித்தனமாக தாக்கியுள்ளார் நிலை தடுமாறி கீழே விழுந்தவரை அருகில் இருந்த கட்டையால் தலையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பத்மினியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.