சென்னையில் மானியமற்ற சமையல் எரிவாய் சிலிண்டர் விலை இவ்ளோ ரூபாய் குறைந்தது!
சென்னையில் மானியமற்ற சமையல் எரிவாய் சிலிண்டர் விலை இவ்ளோ ரூபாய் குறைந்தது!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் உலக விலை நிலவரங்களுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லா சமையல் சிலிண்டர் விலை கடந்த மாதம் மட்டும் சுமார் 150 ரூபாய் உயர்த்தப்பட்டநிலையில் சென்னையில் அதன் விலை 881 ரூபாயாக இருந்தது.
சர்வதேச எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப விலை உயர்ந்ததாகவும், விரைவில் விலை குறையும் என்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேவையற்ற போராட்டம் நடத்தினர். ஆனால் அந்த போராட்டங்கள் பிசுபிசுத்தன.
இந்நிலையில் 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லா சிலிண்டர் விலை மார்ச் 1 முதல் 50 ரூபாய்க்கும் அதிகமாக குறைவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை 55 ரூபாய் குறைந்து 826 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.