Kathir News
Begin typing your search above and press return to search.

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் பெட்ரோல் டீசல் விநியோகம் பாதிக்கப்படாது- ஹர்தீப் சிங் பூரி உறுதி!

செங்கடலில் சவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிக்கப்படாது என்று பெட்ரோலியத் துறை மந்திரி உறுதி கூறியுள்ளார்.

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் பெட்ரோல் டீசல் விநியோகம் பாதிக்கப்படாது- ஹர்தீப் சிங் பூரி உறுதி!
X

KarthigaBy : Karthiga

  |  6 Feb 2024 4:30 AM GMT

ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களின் தாக்குதலுக்கு எண்ணெய் கப்பல்களும் தப்பவில்லை. இதனால் எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற மாநிலங்கவையில் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஜவகர் சிர்கார் கேள்வி எழுப்பினார் . அதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி, ஹர்தீப் சிங் பூரி பதிலளித்தார் அவர் கூறியதாவது:-


செங்கடலில் அரசாங்கத்துக்கு சம்பந்தமில்லாத கிளர்ச்சியாளர்கள் எண்ணெய் விநியோக சங்கிலிக்கு இடையூறு விளைவித்து வருகிறார்கள். இது கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான் .இருப்பினும் உலகம் முழுவதும் நல்லெண்ணம் பிறந்து கவலையை அதிகரிக்க கூடிய காரணிகள் கட்டுப்படுத்தப்படும் என்று நம்புகிறோம். அதனால் நிலைமை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். நிலைமை தீவிரமடையாது .எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாது. இதுவரை சர்வதேச சமூகம் அனுசரித்து நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News