“திருமாவளவனால், பஞ்சமி நிலத்தை ஒருபோதும் மீட்க முடியாது” - நடிகை காயத்ரி ரகுராம் மீண்டும் அதிரடி!
“திருமாவளவனால், பஞ்சமி நிலத்தை ஒருபோதும் மீட்க முடியாது” - நடிகை காயத்ரி ரகுராம் மீண்டும் அதிரடி!
By : Kathir Webdesk
திருமாவளவன் இந்து தெய்வங்களை இழிவாக விமர்சித்துப் பேசியதற்கு நடிகை காயத்ரி
ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டார். “திருமாவளவனை எங்குபார்த்தாலும் இந்துக்கள்,
செருப்பால் அடிக்க வேண்டும்” என்று கருத்து பதிவிட்டு தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து திருமாவளவனின் கட்சியினர், காயத்ரி ரகுராமை தொலைபேசியில் தொடர்புகொண்டு
மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசினார்கள். அந்த தொலைபேசி உரையாடல்களை காயத்ரி
ரகுராம், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது திருமாவளவனின் கட்சியினரின்
கீழ்த்தரமான நடவடிக்கைகளை மக்களுக்கு தோலுரித்து காட்டியது.
இதனைத் தொடர்ந்து திருமாவளவன் கட்சியினர் காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தை
முடக்கினர். மேலும், காயத்ரி ரகுராம் வீட்டு முன்பு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகை காயத்ரி ரகுராமை, கண்டித்து கருத்து வெளியிட்ட திருமாவளவன், ஒட்டுமொத்த
நடிகைகளையும் “அவுத்துப் போட்டுவிட்டு ஆடுபவர்கள்” என்று மிக கீழ்த்தரமான, வக்கிரமான
முறையில் விமர்சனம் செய்தார். இது ஒட்டுமொத்த பெண்களையும் இழிவு படுத்துகின்ற செயல்
என்பதால், பெண்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு ஆளானார் திருமாவளவன்.
இந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் நடிகை காயத்ரி ரகுராம் திருமாவளவன்
குறித்து மீண்டும் குறிப்பிட்டிருப்பதாவது:-
பஞ்சலி நில விவகாரத்தை திசை திருப்புவதற்காக எனது பெயரை பயன்படுத்துகின்றனர்.
பஞ்சமி நிலத்தை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது திருமாவளவனின் நோக்கமல்ல.
அவர் தனது வாழ்க்கைக்காக கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு
சாதகமாக செயல்படுகிறார். ஏழை மக்களுக்கு திருமாவளவன் எதுவும் செய்யவில்லை.
பஞ்சமி நிலத்தை பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி போன்றவர்களால் மட்டுமே
மீட்க முடியும். அவருக்கு மட்டுமே பஞ்சமி நிலத்தை எப்படி மீட்பது என்பது தெரியும்.
திருமாவளவனால், ஒருபோதும் பஞ்சமி நிலத்தை மீட்க முடியாது. அவர் பஞ்சமி நிலத்தை மதம்
மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் விற்று தனது பாக்கெட்டை நிரப்பிக் கொள்பவர்.
கடைசி வரைக்கும் திருமாவளவன் கட்சியினர் அவருக்கு எடுபிடியாகத்தான் இருக்க வேண்டும்.
கொலை மிரட்டல் விடுவது, கொலை செய்வது போன்றவற்றிற்காக மட்டும்தான் அவர் (திருமாவளவன்)
உங்களை (தொண்டர்களை) பயன்படுத்தி வருகிறார். உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
முதுகில் குத்துகின்ற தலைவர்தான், தன் சொந்தத்தையே (இந்துக்களை) தப்பாக பேசுவான்.
இவ்வாறு காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.