“இந்தியை கட்டாயமாக்குவதில் தவறில்லை” - தமிழ் வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை போட்டார் நடிகை காயத்ரி ரகுராம்!!
“இந்தியை கட்டாயமாக்குவதில் தவறில்லை” - தமிழ் வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை போட்டார் நடிகை காயத்ரி ரகுராம்!!
By : Kathir Webdesk
இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால்தான் இந்தியாவை இணைக்க முடியும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் ஆதரவு பெருகியது. ஆனால் தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் போர்க்கொடி தூக்கினார்கள்.
இந்நிலையில், “இந்தி மொழி குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை” என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
தாய்மொழிக்கும், தேசிய மொழிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவின் பல மாநிலங்களில் இந்தி பொது மொழியாக பேசப்பட்டு வருவதால், இந்திய மக்கள் இணைவதற்கு இந்தி வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி செல்ல அடம் பிடிக்கும் குழந்தைகளை, கட்டாயப்படுத்துவது போல், எதிர்காலத்திற்கு நல்லது என்பதால் இந்தியை கட்டாயப்படுத்துவது தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தி தேவை என்பதை வலியுறுத்தி காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.